முதல்வர் ஸ்டாலினுக்கு குவியும் பாராட்டு.. அண்ணாமலை வரிசையில் பொன்.ராதாகிருஷ்ணன்..!

By vinoth kumarFirst Published Aug 15, 2021, 7:31 PM IST
Highlights

தமிழகத்தில் இதை செய்தது பாராட்டுக்குரியது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் திட்டம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. எந்த தெய்வமும், எந்த சாதியும் பார்த்தது கிடையாது. நாம் தான் அவரவர் விருப்பத்துக்கு தக்கவாறு சாமிக்கே சாதியை வைத்துள்ளோம். 

100 நாட்களில் முதல்வர் மு.க ஸ்டாலின் திறப்பட செயல்படுகிறார் என அண்ணாமலையை தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டியுள்ளார்.

கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துகோன் மணி மண்டபத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- திமுக தேர்தல் வாக்குறுதியின்படி தற்போது பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு பாராட்டப்பட வேண்டியது. 

வேளாண் நிதிநிலை அறிக்கை தமிழகத்தில் தான் முதன்முறை. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் வேளாண் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். தமிழகத்தில் இதை செய்தது பாராட்டுக்குரியது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் திட்டம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. எந்த தெய்வமும், எந்த சாதியும் பார்த்தது கிடையாது. நாம் தான் அவரவர் விருப்பத்துக்கு தக்கவாறு சாமிக்கே சாதியை வைத்துள்ளோம். ஆட்சிக்கு வந்து கடந்த 100 நாட்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

மேலும், பேசிய அவர் அதிமுக பாஜக கூட்டணி எப்போது போல் இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் கூட்டணி எப்போதும் போல வலிமையான கூட்டணியாக இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்காக நாங்கள் தயாராகி வருகிறது. அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சியில் தலைமைச் செயலர், டிஜிபி மற்றும் மாவட்ட அளவில் நல்ல ஆட்சியாளர்களைப் பொறுப்புகளில் நியமித்துள்ளனர். அதிகாரிகள் திறம்பட வேலை செய்கின்றனர் என பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!