அப்படிபோடு.. இனி இந்து கோயில்களை சுற்றி மாட்டிறைச்சி விற்க தடை.. மீறினால் கடுமையான தண்டனை..!

By vinoth kumarFirst Published Aug 15, 2021, 2:28 PM IST
Highlights

இந்து கோவில்களுக்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் மாடுகளை இறைச்சிக்காக கொல்வதையும், மாட்டிறைச்சி விற்பனையும் தடை செய்து உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய புதிய கால்நடை பாதுகாப்பு மசோதாவை அசாம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அசாம் மாநிலத்தில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. நேற்று சட்டப்பேரவையில் கால்நடை பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றிகரமாக நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த மசோதா மூலம்  இந்துக்கள், ஜெயினவர்கள் மற்றும் சீக்கியர்கள் நிறைந்த பகுதிகளில் கால்நடைகள் வெட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி கால்நடைகள் மாவட்டம் விட்டு மாவட்டம் கொண்டு செல்வது என்பது குற்றமாகக் கருதப்படும். அத்தகைய குற்றங்களுக்கு ஜாமீன் இல்லா குற்றமாக கருதும் வகையில் இந்த சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின்படி, அசாமில் காளை, கன்று மற்றும் மாடு உள்ளிட்ட அனைத்து மாட்டு இனங்களும் கால்நடைகளாகக் கருதப்படும்.  மேலும், எருமை மாடுகளுக்குச் சட்ட விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

click me!