பொன்னார் கிளப்பி விடும் ‘பயங்கரவாதி’ பகீர்! புகைச்சலில், மண்டைகாயும் எடப்பாடி டீம்...

By sathish kFirst Published Oct 1, 2018, 12:50 PM IST
Highlights

மத்திய அரசின் தமிழக பிரதிநிதியாக செயல்பட்டு வரும் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அத்தனை கட்சிகளின் செயல்பாடுகள், பிரச்னைகள், வளர்ச்சிகள் ஆகியவற்றை பற்றி டெல்லிக்கு ரிப்போர்ட் தரும் பணியையும் சைலண்டாக செய்து வருகிறார். 

மத்திய அரசின் தமிழக பிரதிநிதியாக செயல்பட்டு வரும் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அத்தனை கட்சிகளின் செயல்பாடுகள், பிரச்னைகள், வளர்ச்சிகள் ஆகியவற்றை பற்றி டெல்லிக்கு ரிப்போர்ட் தரும் பணியையும் சைலண்டாக செய்து வருகிறார். 

இதற்கு பிரதியுபகாரமாக, தமிழகம் தொடர்பான சில சீக்ரெட் செய்திகளை மத்திய அரசு  முதலில் பொன்னாரிடம் பகிரும், அவரும் தமிழகம் வந்திறங்கியதும் ஊடகங்களிடம் அதை உடைப்பார். இதைப்பார்த்து ஆளும் தரப்பு ’நமக்கே தெரியாத விஷயத்தை வைத்து இவர் தனி லாபி செய்து கொண்டிருக்கிறாரே!’ என்று கடுப்பேறும். 

டெல்லி கொடுக்கும் சீக்ரெட் நோட்களை வைத்து பொன்னார் அடிக்கடி உடைக்கும் விவகாரம் எதுவென்றால்! மாவோயிஸ்டுகள், பயங்கரவாத நடவடிக்கைகள் உள்ளிட்டவைதான்.அடிக்கடி ‘பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருக்கிறது!’ எனும் விஷயத்தைத்தான் சில ஆதாரங்களுடன் அடிக்கோடிட்டு காட்டி, எச்சரிப்பது பொன்னாரின் அபீஷியல் பொழுதுபோக்காகவே இருக்கிறது! என்பதே ஆளும் தரப்பின் ஆதங்கம். 

உதாரணத்துக்கு கோயமுத்தூர் சிட்டி அருகே கேரளா-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு இடத்தில் மரங்கள் அடர்ந்த பகுதி ஒன்றில்  பச்சை நிற சீருடை அணிந்து, ஆயுதங்கள் வைத்திருந்த ஒரு டீம் பயிற்சி செய்து கொண்டிருந்ததாகவும் அதை மாடு மேய்க்கப்போன சிலர் பார்த்ததாகவும் ஒரு ஸ்கூப்பை உடைத்தார் பொன்னார். பிறகு அது மாநில போலீஸால் உறுதி செய்யப்பட்டது. இது பரபரப்பானது. 

தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக சட்ட ஒழுங்கு நிலை குறித்து ‘அமைதிப்பூங்காவாக திகழ்கிறது தமிழகம்’ என்று சிலாகிக்கும் போதெல்லாம் பொன்னார் ஏதாவது ஒரு விஷயத்தை குறிப்பிட்டு சொல்லி ஒரு குட்டு குட்டுவார். ஆக இந்த விவாகரத்தினால் பொன்னாருக்கும் - தமிழக முதல்வர்களுக்கும் இடையில் உரசல்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. 

இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு குண்டை பற்றவைத்து வீசியிருக்கிறார் பொன்னார். நீலகிரி மாவட்டம் வந்திருந்த அவர், குன்னூர் அருகே பேட்டி ஒன்றை தட்டுகையில் “தமிழக எல்லையோர பகுதிகளில் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்த தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வருவதால், தமிழக அரசு, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.” என்று நேற்று ஒரு ஸ்கூப்பை உடைத்துள்ளார். 

இது முதல்வர் எடப்பாடியாரின் காதுகளை எட்ட, கோட்டை வட்டாரம் பரபரப்பாகி இருக்கிறது. குறிப்பாக டி.ஜி.பி. அலுவலகம் தான் ஷாக் ஆகியிருக்கிறது. காரணம், ‘டெல்லியின் சீக்ரெட் நோட் இல்லாமல், பொன்னார் பேசமாட்டார். அப்படியானால் மாவோயிஸ்ட் டீம் ஏதாவது வேலையை காட்ட திட்டமிட்டுள்ளதா! நீலகிரியில் வைத்து பொன்னார் இதை பேசியுள்ளதால், ஏற்கனவே மாவோயிஸ்ட் முகாம்கள் அதிகமிருப்பது நீலகிரி மலைப்பகுதி என்பதால் அதைவைத்துதான் இவ்வளவு உறுதியாக பேசுகிறாரோ?’ என்றெல்லாம் தலையை பிய்த்துக் கொள்கிறார்கள்.

click me!