எம்.ஜி,ஆர். விழாவில் இருந்து கோபத்தோடு வெளியேறிய கோகுல இந்திரா… கட்சியில் இருந்து வெளியேற வாய்ப்பு !!

By Selvanayagam PFirst Published Oct 1, 2018, 9:37 AM IST
Highlights

சென்னையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக மேடையேற வந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திராவுக்கு இருக்கை ஒதுக்கப்படாததால் தன் கையில் இருந்த இண்விடேசனை தூக்கி அடித்துவிட்டு அங்கிருந்த வெளியேறினார். ஏற்கனவே டி.டி.வி. ஆதரவாளர் என்ற சந்தேகத்துடன் பாக்கப்பட்டு வந்த கோகுல இந்திரா தற்போது அதிமுகவை விட்டு விலகுவார் என தெரிகிறது.

முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான கோகுல இந்திரா அக்கட்சிக்காக  பொது மேடைகளிலும், ஊடகங்களிலும் பேசி வருகிறார். அதிமுகவின் முக்கியமான புள்ளியாக அறியப்படுபவர் கோகுல இந்திரா.

நேற்று சென்னையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக கோகுல இந்திரா மேடைக்கு வந்தார். ஆனால் அவருக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்படவில்லை, அதே நேரத்தில் மதுசூதனன், கே.பி.முனுசாமி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் போன்றோருக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கோகுல இந்திராவை மேடையில் ஏறவிடாத அதிகாரிகள் இது அரசு விழா, அமைச்சர்களுக்கு மட்டும் தான் இருக்கை ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறினர். நான் கட்சியின் அமைப்புச் செயலாளர், முக்கியமான ஆள் எனக்கே இருக்கை இல்லையா? என அவர் ஆத்திரமடைந்தார்.

இதையடுத்து தனது கையில் இருந்த விழா இண்விடேஷனை  தூக்கி அடித்த கோகுல இந்திரா, உடனடியாக அங்கிருந்து வெளியேறினார். இதையடுத்து கோகுல இந்திரா விரைவில் அதிமுகவில் இருந்து விலகுவார் என்றும் டி.டி.வி.தினகரன்  அணியில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

click me!