என்ன நடந்தது திருமுருகன் காந்திக்கு? சிறை உணவில் என்ன கலந்தார்கள்? அதிரடி சந்தேகம் கிளப்பும் முகிலன் !!

By Selvanayagam PFirst Published Oct 1, 2018, 11:13 AM IST
Highlights

தமிழகத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை ஒடுக்க, அவர்களை சிறையில் அடைத்து, அங்கு கொடுக்கப்படும் சாப்பாட்டில் உடலை பாதிக்கக்கூடிய சில மருந்துகளை கலந்து போரட்டம் நடத்துபவர்களை பலவீனப்படுத்து முறைகளை கையாண்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதிதான் திருமுருகன் காந்தி, வயிற்று வலிக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ருப்பதாகவும் ஜல்லிக்கட்டு போராளி முகிலன் பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிய திருமுருகன் காந்தி இந்திய அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் திருமுருகன் காந்தி அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் யாருமே பயன்படுத்தாத பழைய பாழடைந்த கட்டிடத்தில் உள்ள அறையில் தனிமைச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

மேலும் சிறையில் திருமுருகன் காந்திக்கு வழங்கப்படும் உணவு மிகவும் மோசமான நிலையில் சாப்பிட இயலாத வகையில் உள்ளதாக புகார் எழுந்தது. மேலும் அவருக்கு சரியான நேரத்தில் சாப்பாடு வழங்கப்படுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்டு தற்போது அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிந்நை பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேல் சிறையில்  இருந்து அண்மையில்தான் விடுவிக்கப்பட்டார்.  அவர் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை எப்படி சிறையில் நடத்துகிறார்கள், அவர்களை ஒடுக்க அரசு நடத்தும  கொடுமைகள் குறித்து பல பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை ஒடுக்க, அவர்களை சிறையில் அடைத்து, அங்கு கொடுக்கப்படும் சாப்பாட்டில் உடலை பாதிக்கக்கூடிய சில மருந்துகளை கலந்து வருவதாகவும், அதன் மூலம் போராட்டம் நடத்துபவர்களை பலவீனப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் ஒரு பகுதிதான் திருமுருகன் காந்தி, வயிற்று வலிக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ஜல்லிக்கட்டு போராளி முகிலன் பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு செல்லவிருப்பதாகவும், விரைவில் வழக்கு தொடர உள்ளதாகவும் முகிலன் தெரிவித்துள்ளார்.

click me!