இறுதி கட்டத்தை நெருங்கும் ஜெ. மரண விவகாரம்... பதர்சயித், பொன் மாணிக்கவேல் ஆஜர்

First Published May 25, 2018, 3:48 PM IST
Highlights
Pon Manikkavel Pathar Sayed appered for Jayalalithaa Death Case


ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பதர்சயீத் மற்றும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் இன்று ஆஜராகி விளக்கமளித்தனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் காரணமாக 2016 டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதுவரை 45-க்கும் மேற்பட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் பள்ளித் தோழி பதர்சயீத், போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் ஆகியோர் விசாரணை கமி‌ஷன் முன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. 

இதைத் தொடர்ந்து பதர்சயீத் மற்றும் பொன் மாணிக்கவேல் ஆகியோர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகினர். விசாரணையின்போது 2011 ஆம் ஆண்டு போயஸ் கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றபட்டபோது, உளவு பிரிவு டிஐஜியாக இருந்த பொன். மாணிக்கவேலிடம், அப்போதைய நிலவரம் குறித்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சசிகலா வெளியேற்றப்பட்டபோது, வேதா இல்லத்தில் இருந்த சூழல், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்தவர்கள் யார்? யார்? மீண்டும் சசிகலாவை ஜெயலலிதா ஏற்றுக் கொண்ட பின் அங்கிருந்த சூழல் உள்ளிட்டவை குறித்து பொன் மாணிக்கவேலிடம் கேட்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் பள்ளித் தோழி ஃபதர் சயீத் இடமும் விசாரணை நடத்தப்பட்டது. சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன்விசாரணைக்கு வர இன்று உத்தரவிட்டிருந்த நிலையில் அவர் ஆஜராகவில்லை.

click me!