கூட்டணி தொடருமா...! ஆட்சி நிலைக்குமா...? - இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

First Published May 25, 2018, 2:31 PM IST
Highlights
kumarasami vote of confidence


கர்நாடகவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிக தொகுதிகள் வென்றதாக கூறி பா.ஜ.கவை சேர்ந்த எடியூரப்பா ஆட்சி அமைக்க ஆளுநர் கோரியிருந்தார்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு பெரும்பான்மை நிரூபிக்க கோரியது. ஆனால் எடியூரப்பாவால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாத காரணத்தால் மூன்றே நாளில் பதவி விலகினார்.

காங்கிரஸும் மஜதவும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க ஆளுநரை அணுகியது. இதில் காங்கிரஸ் 78 மஜத 37 இடங்களை பெற்றது. இதில் அதிக இடங்களை பெற்ற காங்கிரஸ் தலைமையேற்காமல் மஜதவின் குமாரசாமி முதல்வர் பதவியை பெற்றார். காங்கிரஸ் ஐந்து ஆண்டும் தொடர்ந்து ஆதரவு தரும் என  கூறியுள்ளது .

அதன்படி பதவியேற்ற குமாரசாமி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை நிறைவேற்றி பேசி வருகிறார்.. இதில் உதிரி கட்சிகள் இருவர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 117 பேர் ஆதரவு கிடைக்குமென தெரிகிறது. காங்கிரஸ் –மஜத கூட்டணி ஆட்சி செய்யும் என உறுதியாகியுள்ளது.  

கூட்டணி தொடருமா ஆட்சி நிலைக்குமா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

 

click me!