அரசுக்கு எதிரான சிபிஐ விசாரணை... அரசே முடிவு செய்யும்...! வழக்கை முடித்து வைத்த ஐகோர்ட்

Asianet News Tamil  
Published : May 25, 2018, 03:18 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
அரசுக்கு எதிரான சிபிஐ விசாரணை... அரசே முடிவு செய்யும்...! வழக்கை முடித்து வைத்த ஐகோர்ட்

சுருக்கம்

high court judgement

தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டம் 100வது நாளில் நடந்த ஆட்சியர் முற்றுகை போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது.

துப்பாக்கி சூடு நடத்தும்முன் வானத்தை நோக்கி மூன்று முறை சுட்டு அறிவித்து பின் முட்டிக்குகீழ்தான் சுட வேண்டும். மாறாக போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நபர்களை நெஞ்சிலும், முகத்திலும் சுட்டு அவர்களை சாகடித்துள்ளது.

இதனால் தமிழகமெங்கும் கண்டன ஆர்பாட்டங்களும் போராட்டங்களும்  நடைபெற்று வருகின்றன. அரசின் இச்செயலுக்கு எதிராக பலரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

இந்நிலையில் மனுதாரர் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் கொடுத்துள்ள மனுவில் துப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை வேண்டுமென கோரியிருந்தார் இதனை சென்னை உயர்நீதிமன்றம் வேல்முருகன் , ரவீந்திரன் அமர்வு வழக்கை விசாரித்தது.

துப்பாக்கி சூடு குறித்து சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு பரிசீலிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

அரசு செய்த குற்றச்செயலுக்கு அரசயே பரிசீலிக்க கூறுவது முற்றிலும் நீதிக்கு புறம்பானதென பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்

 

PREV
click me!

Recommended Stories

விஜய் எல்லாம் அதிமுகவை விமர்சிக்கலாமா..? தவெக-வே லாட்டரி பணத்தில்தான் நடத்தப்படுது.. ஜெயகுமார் அதிரடி அட்டாக்..!
உறுதி கொடுத்த ராகுல்..! இறுதியான திமுக கூட்டணி..! அறிவாலயம் வளைத்த கட்சிகளின் டீடெய்ல் லிஸ்ட்..!