அரசியல் சூதாட்ட வெற்றி விழாதான் அயோத்தியில் நடந்தேறியுள்ளது...திருமாவளவன் விமர்சனம்..!

By vinoth kumar  |  First Published Jan 23, 2024, 7:42 AM IST

இராமர் என்கிற சத்திரிய அடையாளத்தை ஆயுதமாக ஏந்தி, மோடி என்கிற வைஸ்யரைக் கொண்டு அப்பாவி சூத்திர இந்துக்களை ஏய்த்து அவர்களை வீழ்த்திய பிராமண சனாதனிகளின் அரசியல் சூதாட்ட வெற்றி விழாதான் அயோத்தியில் நடந்தேறியுள்ளது.


இந்துத்துவா என்னும் பெயரில் சைவம் உள்ளிட்ட பிற இந்து அடையாளங்கள் யாவற்றையும்  பார்ப்பனிய வைணவமயமாக்கும் சூழ்ச்சி அரங்கேறியுள்ளது என திருமாவளவன் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.  121 வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க கோயிலின் மூலவர் குழந்தை ராமர் சிலை  பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிராண பிரதிஷ்டா எனும் சடங்கு சிலைக்கு உயிரூட்டுவதாகும். இதையடுத்து, அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இந்நிலையில், இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல், இராமரின் பெயரால் வெற்றிவாகை சூடியுள்ளது என திருமாவளவன் கூறியுள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அயோத்தி இராமர் விழா.. அப்பாவி இந்து மக்களை ஏய்க்கும் தேர்தல் பிரச்சார அரசியல் விழா- திருமாவளவன்

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான தொல். வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- அயோத்தியில் வரலாற்றுத் திரிபு வாதம், பெரும்பான்மை ஆதிக்க வாதத்தால் வென்றுள்ளது. இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல், இராமரின் பெயரால் வெற்றிவாகை சூடியுள்ளது. 

இராமர் என்கிற சத்திரிய அடையாளத்தை ஆயுதமாக ஏந்தி, மோடி என்கிற வைஸ்யரைக் கொண்டு அப்பாவி சூத்திர இந்துக்களை ஏய்த்து அவர்களை வீழ்த்திய பிராமண சனாதனிகளின் அரசியல் சூதாட்ட வெற்றி விழாதான் அயோத்தியில் நடந்தேறியுள்ளது.

இதையும் படிங்க;-  கொடுமைப்படுத்தியதை சொல்லி கதறும் ரேகா! நெஞ்சை உலுக்குகிறது! ஆளுங்கட்சி எம்எல்ஏ மகனுக்கு எதிராக திமிரும் திருமா

இந்துத்துவா என்னும் பெயரில் சைவம் உள்ளிட்ட பிற இந்து அடையாளங்கள் யாவற்றையும்  பார்ப்பனிய வைணவமயமாக்கும் சூழ்ச்சி அரங்கேறியுள்ளது. இது இசுலாமியர், கிறித்தவர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டு மொத்த தேசத்திற்கும், அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கும் எதிரானது என திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். 

click me!