பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகம்
ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் கும்பாபிஷேக விழாவை கொண்டாட பாஜகவினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு சார்பாக பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்க அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
ஆனால் இதனை தமிழக அரசு முற்றிலும் மறுத்துள்ளது. அப்படி எந்த வித தடை உத்தரவும் பிறப்பிக்கவில்லையென தெரிவிக்கப்பட்டது. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வுக்காக பக்தர்கள் நேரலையாக பார்ப்பதற்கபாக வைக்கப்பட்டிருந்த எல்இடி திரைகள் அகற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயிலில் மாறுபட்ட சூழ்நிலை
இதனிடையே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பாக் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "இன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது.
"This morning I visited Sri Kodandaramaswami Temple, West Mambalam, Chennai, and offered prayers to Prabhu Sri Ram for the well-being of all.
This temple is under HR&CE Dept.
There was an all pervasive sense of invisible fear and apprehensions writ large on the faces of priests…
நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோயில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது என ஆளுநர் ரவி கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்