திமுக ஆட்சியில் போலீஸ் கொலையாவது தொடர்கதைதான்.. போட்டுத் தாக்கும் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்..!

By Asianet TamilFirst Published Nov 21, 2021, 8:25 PM IST
Highlights

திமுக அரசு ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காவல்துறை பெரிய தாக்குதலுக்கு உள்ளாவது நடைபெற்றேகொண்டே வருகிறது. போலீசார் அடி வாங்குவதும், கொல்லப்படுவதும் திமுக ஆட்சியில் தொடர் கதைதான்.

போலீஸுக்கே திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்றால், பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். 

சென்னையில் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பெட்ரோல் கலால் வரியில் லிட்டருக்கு ரூ. 5 குறைக்கப்பட்டது.  டீசலுக்கு ரூ.10 குறைக்கப்பட்டது. மத்திய அரசு எரிபொருள் விலைகளைக் குறைத்திருக்கும் நிலையில் பல்வேறு மாநிலங்களும் மாநில வரியை குறைத்துள்ளன. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த ஓர் அறிவிப்பும் வெளியாகவில்லை. நிதியமைச்சர் கொடுத்த விளக்கத்தைப் பார்த்தால், போகாத ஊருக்கு வழி தேடுகிற கதையாக உள்ளது. 

மழையால் சென்னை காசிமேடு உள்பட பல மீன்பிடி துறைமுகங்கள், நாட்டு படகுகள், கட்டுமரங்கள் விசைபடகுகள், மீன்பிடி கலன்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை பாதிப்புகளைக் கணக்கெடுக்க யாரும் வரவில்லை. மீனவர்கள் எல்லாம் நிவாரணம் தருவார்களா என்ற ஏக்கத்தில் உள்ளனர். தமிழக அரசு உடனடியாகக் குழு போடுகிறோம் என்று தெரிவித்தார்கள். ஆனால், அதுவும் தெரியவில்லை. அதிமுக ஆட்சியில் உடனடியாக அரசாணையை வெளியிட்டோம். ஆனால், இவர்கள் எந்தக் குழுவுமே போடவில்லை. எந்த அசாரணையும் போடவில்லை. எல்லாமே மர்மமாக உள்ளது.

திமுக அரசு ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காவல்துறை பெரிய தாக்குதலுக்கு உள்ளாவது நடைபெற்றேகொண்டே வருகிறது. போலீசார் அடி வாங்குவதும், கொல்லப்படுவதும் திமுக ஆட்சியில் தொடர் கதைதான். திருச்சியில் நடந்த போலீஸ் கொலை சம்பவம்  வேதனைக்குரியது, கண்டனத்துக்குரியது. போலீஸுக்கே திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்றால், பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்? அதுபோல கல்லூரி மாணவர்கள் நியாமான முறையில் போராடுகிறார்கள். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வந்து தேர்வு எழுதுங்கள் என்றால் எப்படி எழுத முடியும்? மாணவர்களை ஏமாற்றும் வேலையைத்தான் திமுக அரசு செய்துவருகிறது” என்று ஜெயக்குமார் தெரிவித்தார். 

click me!