தமிழிசை உருவ பொம்மை எரிப்பு - 12 விசிகவினர் கைது...!

First Published Oct 24, 2017, 8:54 AM IST
Highlights
Police arrested 12 LTTE cadres who carried out the scene of burning his idol before Tamilnadu Sundar Rajans house.


திருமாவளவன் பற்றி கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழிசை சவுந்தரராஜன் வீடு முன்பு அவரது உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாரிக்கப்பட்ட படம் மெர்சல். இப்படம் தடைகள் பலவற்றைக் கடந்து தீபாவளியன்று வெளியாகியது. 

தற்போது பல்வேறு வசூல் சாதனைகளையும் இப்படம் படைத்து வருகிறது. இந்த படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். 

பாஜகவின் இத்தகைய கருத்திற்கு அரசியல், திரையுலகினர் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே நடிகர் விஜயை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவின் உள்நோக்கமாக கூட இருக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திருமாவளவனின் அனுபவம் பேசுகிறது என்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து இடத்தை பிடுங்குபவர் திருமாவளவன் எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், திருமாவளவன் பற்றி கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழிசை சவுந்தரராஜன் வீடு முன்பு அவரது உருவபொம்மையை எரித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம் நடத்தினர். 

இதையடுத்து போராட்டம் நடத்திய 12 பேரை போலீசார் கைது செய்தனர். 

click me!