டிடிவி, செந்தில் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு...

 
Published : Oct 24, 2017, 06:47 AM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
டிடிவி, செந்தில் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு...

சுருக்கம்

high court case is postpond about ttv dinakaran and senthil

திருச்சி தொகுதி அதிமுக எம்.பி குமார் நடிகர் செந்தில் தன்னை விமர்சித்ததாக தொடுத்த வழக்கு விசாரணைக்கு நவம்பர் 3 ஆம் தேதிவரை தடை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

திருச்சி தொகுதி அதிமுக எம்.பி. குமார், நடிகர் செந்தில் தன்னை விமர்சித்ததாக திருச்சி மாநகர குற்றப்பிரிவு  போலீசாரிடம் புகார் அளித்தார். 

இதையடுத்து டி.டி.வி.தினகரன் மற்றும் நடிகர் செந்தில் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் இந்த வழக்கை ரத்து செய்ய கோரியும் டிடிவி தினகரன் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

இதையடுத்து இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்திருந்தது. 

இதுதொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது  இடைக்காலத் தடை நவம்பர் 3 வரை நீட்டிக்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

இஸ்லாமிய நாடுகளில் மோடி, யூத நாடுகளில் ஜெய்சங்கர்..! உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திர வியூகம்..!
குனிந்து கும்பிடும் போடும் உங்களுக்கு ‘அதிமுக’ என்ற பெயர் எதற்கு? வாய் திறக்காத இபிஎஸ்க்கு எதிராக முதல்வர் காட்டம்