கந்து வட்டி மரணங்களுக்கு மாவட்ட நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் - ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்...!

First Published Oct 24, 2017, 7:03 AM IST
Highlights
We need to take serious action against all those who are responsible for killing deaths


கந்துவட்டி மரணங்களுக்கு காரணமான அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கந்துவட்டியால் உயிரிழந்தவர்களின் மரணங்களுக்கு மாவட்ட நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் எனவும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லையில் இசக்கிமுத்து குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் தமிழகத்தை புதறவைத்துள்ளதாகவும் மனைவி, அவரது 2 குழந்தைகள் தீக்குளித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

ஆட்சியர், காவல்கண்காணிப்பாளர், அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை எனவும் காவல்த்துறை கந்துவட்டிக்கும்பலுக்கு ஆதரவாக இருந்ததன் காரணமாக இந்த கொடூர மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
மேலும் உயிரிழந்தவர்களின் மரணத்துக்கு, நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகமே பொறுப்பேற்கவேண்டும் எனவும் கந்துவட்டி மரணங்களுக்கு காரணமான அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

click me!