
30 ஆண்டுகளுக்கும் மேலாக புரியாத புதிராக இருந்த அரசியல் பிரவேசத்துக்கு டிசம்பர் 31-ம் தேதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரஜினி. ரசிகர்களை பொறுத்தவரை கடந்த ஆண்டின் முடிவில் செம டிரீட்டாக இருந்தது. ரஜினியின் அரசியல் அறிவிப்பால் தமிழகத்தின் அரசியல் கட்சிகளுக்குக் கலக்கம் ஏற்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. என்னதான் தலைவர் அரசியலுக்கு வருகிறேன், என அறிவித்தாலும் ஆன்மீக அரசியல்ன்னா என்னன்னு புரியலையே என சாதாரண எண்ணுகிறார்கள்.
இந்தியாவில் விவிவிஐபி ஏரியான்னா அது போயஸ் கார்டன் தான், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இல்லம் அமைந்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின் தமிழக அரசியலில் மீண்டும்இடம்பிடித்துள்ளது போயஸ் கார்டன்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, போயஸ் கார்டன் எப்போதுமே பரபரப்பாக இருக்கும். தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த ஜெயலலிதா தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்தே பல சாதனைகளை படைத்தார்.
கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடங்கி அ.தி.மு.க.வின் கொள்கை முடிவுகள் அனைத்தையுமே போயஸில் தான் நடந்தது. ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின் களையிழந்து காணப்பட்ட போயஸ் கார்டன் ரஜினியின் ஆன்மீக அரசியல் அறிவிப்புக்குப் பின் முக்கிய புள்ளிகள், அரசியல் தலைகள் குவிகிறார்களாம். “அன்று ஜெயலலிதாவால் பரபரப்பாக காணப்பட்ட போயஸ் கார்டன் பகுதியில் இன்று ரஜினியால் மீண்டும் பரபரப்பு களமாக மாறிப் போய் உள்ளது” கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் சந்திப்பின்போது பக்கா அரசியல்வாதிகளைப் போல வெள்ளை வேஷ்டி-சட்டையில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் வந்திருந்தார்கள்.
போயஸ் கார்டனில் கூட்டத்தைக் குறைக்க முன் ஏற்பாடுகளை செய்ய சொன்னாராம். அடுத்ததாக மார்கழி மாதத்திற்கு முன்பே, மண்டபத்தில் பட்டி டிங்கரிங் பார்க்க சொன்னாராம். அதே போல, மண்டபத்தின் அலுவலகம் வைக்க உத்தரவாம். அதுமட்டுமல்ல கான்பிரன்ஸ் ஹால் ஒன்றை ரெடி சொன்னாராம். ரஜினி அறையிலிருந்து அந்த கான்பிரன்ஸ் ஹாலுக்கு வரும்விதமாக பட்டி டிங்கரிங் வேலைகள் வேகமாக நடந்து வருகிறதாம்.