10 சங்கம் மட்டும்தான் உடன்படவில்லை.. மத்தவங்கலாம் ஒத்துகிட்டாங்க - அமைச்சர் விஜயபாஸ்கர்

 
Published : Jan 05, 2018, 10:45 AM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
10 சங்கம் மட்டும்தான் உடன்படவில்லை.. மத்தவங்கலாம் ஒத்துகிட்டாங்க - அமைச்சர் விஜயபாஸ்கர்

சுருக்கம்

buses will be run by temporary staffs said minister mr vijayabaskar

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், தமிழகம் முழுவதும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்காலிக ஊழியர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் 1.43 லட்சம் தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே போடப்பட்ட 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைந்தது. புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது.

13வது ஊதிய ஒப்பந்தத்தில் 2.57% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன. போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கி பேச்சுவார்த்தை நடந்தது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்துத்துறை உயரதிகாரிகள் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. ஆனால், உடன்பாடு எட்டப்படவில்லை. 

2.57 சதவீத ஊதிய உயர்வு என்றால் 10 ஆண்டுக்கு ஒருமுறையும், 2.44 சதவீத உயர்வு என்றால் 4 ஆண்டுக்கு ஒரு முறையும் 2.37 சதவீத உயர்வு என்றால் 3 ஆண்டுக்கு ஒருமுறையும் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அரசு தெரிவித்தது. தொழிற்சங்க நிர்வாகிகள் இதை ஏற்க மறுத்தனர். பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோதே போக்குவரத்து ஊழியர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், இன்று காலையும் வேலைநிறுத்தம் தொடர்கிறது. சென்னையில் 40% பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. இதனால் மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லமுடியாமலும் பயணிகள் வேலைக்கு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்து ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோதே போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 32 தொழிற்சங்கங்கள் அரசின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுள்ளனர். தொ.மு.ச., சி.ஐ.டி.யு உள்ளிட்ட 10 சங்கங்கள் மட்டுமே அதை ஏற்கவில்லை. 

தற்காலிக ஊழியர்களை நியமித்து பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

பேமிலி, பிரெண்ட்ஸ் வாட்ஸ்ஆப் குரூப்களில் கூட விஷம் பரப்பும் மதவாதிகள்.. அலெர்ட் கொடுக்கும் முதல்வர்..
நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு