
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று மாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெலும்பாலன பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதையடுத்து சென்னை மின்சார ரயிலில் கூட்டம் அலை மோதுகிறது.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் நடத்தி வரும்போராட்டத்தால் தமிழகம் முழுவதும் இன்று குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூரில் 25 அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 பணிமனைகளில் 40 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூரில் 200பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 11பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. அரியலூரில்140 அரசு பஸ்களில் 25 பஸ்கள் மட்டும் இயக்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் 20 சதவீத அளவிற்கே அரசுபஸ்கள் இயக்கப்படுகிறது. கடலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் முழுமையாக அரசு பஸ்கள் இயக்கப்பட வில்லை.
தமிழகத்தில் அரசு பஸ் ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் பஸ்கள் முன்னெச்சரிக்கை காரணமாக களியாக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அதே போல் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் கர்நாடக மாநில பஸ்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையில், 35 சதவீத அளவு பேருந்துகளே இயக்கப்படுகின்றன. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் போன்றவை மட்டமே இயங்கி வருவதால் அதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கபபடுவதாக புகார் எழுந்துள்ளது.
இதனிடையே பேருந்துகள் இயக்கப்படாததால் சென்னையில் மின்சார ரயில்களிலும், மெட்ரோ ரயிலிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.