
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுக்க முடிந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான துரோக அரசால் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு சில ஆயிரங்களை வழங்க வக்கில்லையா என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளருமான செந்தில் பாலாஜி, உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 47 தொழிற்சங்கங்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பாடாததையடுத்து நேற்று மாலை முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்தத்தால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளருமான செந்தில் பாலாஜி, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுக்க முடிந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான துரோக அரசால் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு சில ஆயிரங்களை வழங்க வக்கில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்பிரச்சனையை தீர்க்க முடியாத இந்த துரோக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.