புத்தாண்டில் வாட்ஸ் அப்பில் மூலம் இந்தியர்கள் புதிய சாதனை....எவ்வளவு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்கள் தெரியுமா? ஷாக் ஆகிடாதீங்க…

Asianet News Tamil  
Published : Jan 04, 2018, 11:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
புத்தாண்டில் வாட்ஸ் அப்பில் மூலம் இந்தியர்கள் புதிய சாதனை....எவ்வளவு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்கள் தெரியுமா? ஷாக் ஆகிடாதீங்க…

சுருக்கம்

whattapp record in greetings for new year

புத்தாண்டு அன்று இந்தியர்கள் தங்களின் பிரியமானவர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் 2 ஆயிரம் கோடி(20பில்லியன்) வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து வாட்ஸ் அப் செயலியை இயக்கி வரும் பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

20 கோடி

இந்தியாவில் மாதத்துக்கு 20கோடி பேர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். 2018ம் புத்தாண்டு பிறந்த தினத்தன்று இந்தியர்கள் தங்களின் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், பிரியமானவர்களுக்கும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பினர்.

2 ஆயிரம் கோடி

அந்தவகையில் ஜனவரி 1ந் தேதி 12 மணிக்கு பிறந்ததில் இருந்து அன்று இரவு 11.59 மணி வரை 2 ஆயிரம் கோடி வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொண்டுள்ளனர்.

புதிய வசதிகள்

2017ம் ஆண்டு வாட்ஸ் அப்பில் பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தினோம், அது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. குறிப்பாக வீடியோ காலிங்,லைவ் லொகேசன், செய்திகளை அழித்தல்(டெலிட்), புகைப்படங்களை பார்க்கும் ஆல்பம் வசதி,ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ளுதல் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு

கடந்த புத்தாண்டுக்கு ஆயிரத்து 400 கோடி வாழ்த்துச் செய்திகளை இந்தியர்கள் ஒருவொருக்கு ஒருவர்  பரிமாறிக்கொண்டனர். புத்தாண்டு அன்று வாட்ஸ் அப்பில் வாழ்த்துச் செய்திகள் அதிகமாகப் பரிமாறிக்கொண்ட காரணத்தால், பல நாடுகளில் வாட்ஸ் அப் செயலி 2 மணி நேரம் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு.. மலைக்கோட்டையில் மாஸ் சம்பவத்துக்கு ரெடி.. தேதி குறித்த திமுக!
கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? கமலாலயத்தில் ஒரு மூலையில் உட்காருங்க.. ஆளுநரை கடுமையாக விமர்சித்த திமுக!