இனி எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது... ஜி.கே.மணி அதிரடி!!

By Narendran S  |  First Published Feb 7, 2023, 8:43 PM IST

தமிழகத்தில் இனி எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது என அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். 


தமிழகத்தில் இனி எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது என அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், தமிழைத் தேடி பரப்புரை பயணம் தமிழை மீட்டெடுக்கவும் தமிழை வளர்க்கவும் தமிழை காப்பாற்றப்பட வேண்டும் எனவும் தமிழ் சிதைந்து விடக்கூடாது என்கின்ற எண்ணத்தில் இந்த பயணம் நடைபெறுகிறது. தமிழ் அன்னை சிலையுடன் இந்த பயணம் தொடங்கப்படுகிறது.

இதையும் படிங்க: நெற்பயிர்களுக்கு நிவாரணத்தொகையாக ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும்... அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!

Latest Videos

இந்த பயணம் தமிழ் மக்களிடமும் தமிழ் ஆர்வலர்களிடமும் நல்ல வரவேற்பை பெரும் எனவும், இந்த பயணம் என்பது எந்தவித அரசியல் கலப்பு இல்லாமல் அரசியல் கொடி இல்லாமல், கொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பிலும் இந்த பயணம் நடைபெறுகிறது. ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உலக தாய்மொழி தினமாக பிப்ரவரி 21ஆம் தேதி அறிவித்துள்ளது. அந்த தேதியில் தான் இந்த பயணம் தொடங்குகிறது. அதற்கு உண்டான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் இனி எந்த ஒரு இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது.

இதையும் படிங்க: பழநி கோவிலில் அத்துமீறி நுழைந்தது உண்மையா.? வானதி கேட்ட கேள்வி! அமைச்சர் சேகர்பாபு என்ன சொல்கிறார்.?

நாங்கள் ஒரே ஒரு இடைத்தேர்தல் மட்டுமே போட்டியிட்டு உள்ளோம். இனிவரும் காலங்களில் போட்டியிட மாட்டோம். இடைத் தேர்தல் ஒரு தொகுதி வெற்றியால் ஆட்சி மாற்றம் நடைபெறுமா? அப்படி இருக்கும் நிலையில் ஏன் இந்த இடைதேர்தலில் போட்டியிட வேண்டும் என கருத்தில் கொண்டு இனி தமிழகத்தில் நடைபெறும் எந்த ஒரு இடைதேர்தலில்  பாமக போட்டியிடாது. இந்த இடை தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். 

click me!