உடன்கட்டை ஏறுவது குறித்து மக்களவையில் பாஜக உறுப்பினர் பெருமையாக பேசுவது வெட்கப்படவைக்கும் செயல் என எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உடன்கட்டை ஏறுவது குறித்து மக்களவையில் பாஜக உறுப்பினர் பெருமையாக பேசுவது வெட்கப்படவைக்கும் செயல் என எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, தமிழகம், கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர். தமிழகத்தில் தேர்தல் ஏதும் இல்லை என்பதால் ஜனாதிபதி உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டவில்லை. தமிழக ஆளுநர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளனர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுடன் மோதல் போக்கை கையாளுகின்றனர். ஆளுநர்களுக்கு அரசியல் சாசனத்தையும் , கூட்டாட்சி முறையையும் கற்பிக்க வேண்டும். மாநிலங்களின் நலன், மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: நெற்பயிர்களுக்கு நிவாரணத்தொகையாக ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும்... அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!
நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. நாட்டில் சுமார் 4 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. ஒன்றிய அரசு சர்வாதிகார போக்கை நோக்கி செல்கிறது. சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கும் ஒன்றிய அரசு, தமிழ் வளர்ச்சிக்கு மிக மிக குறைவாக நிதி ஒதுக்குகிறது. தமிழின் பெருமையை பற்றி மட்டும் மோடி பேசுகிறார். ஆனால் சமஸ்கிருதத்திற்கே அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. சமஸ்கிருதத்திற்கு ரூ.198.98 கோடி நிதி ஒதுக்கிய நிலையில், தமிழுக்கு ரூ.11.86 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பழநி கோவிலில் அத்துமீறி நுழைந்தது உண்மையா.? வானதி கேட்ட கேள்வி! அமைச்சர் சேகர்பாபு என்ன சொல்கிறார்.?
4 ஆண்டுகளுக்கு முன் மதுரை எய்ம்ஸ்-க்கு மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் இன்று வரை பணிகள் தொடங்கவில்லை. அதற்கான நிதியையும் ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை.மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்த பாஜகவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது?. 27 நாடாளுமன்ற கூட்டத் தொடர்கள் முடிந்துவிட்டன. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ன ஆனது?. தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாக்கவே ஒன்றிய அரசு முன்னுரிமை அளிக்கிறது. பெண்களுக்கு 33% ஒதுக்கீடு குறித்த ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?. பாஜக உறுப்பினர் ஜோஷி பெண்கள் உடன்கட்டை ஏறுவது குறித்து மக்களவையில் பெருமையாக பேசுவது வெட்கப்படவைக்கும் செயல் என்று தெரிவித்துள்ளார்.