2026 இல் தமிழ்நாட்டில் பாமக ஆட்சி.. இனி தனித்து நின்று யாருமே ஜெயிக்க முடியாது.. அடித்து சொல்லும் அன்புமணி.

By Ezhilarasan BabuFirst Published Jul 15, 2022, 12:42 PM IST
Highlights

2026 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியுடன் தமிழகத்தில் பாமக காமராஜர் ஆட்சியை  அமைக்கும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

2026 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியுடன் தமிழகத்தில் பாமக காமராஜர் ஆட்சியை  அமைக்கும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் சென்னை விமான நிலையத்தில் காமராஜர் பெயர் பலகை விரைவில் வைக்கவேண்டும் என்றும் இல்லையென்றால் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். 

நாடு முழுவதும் காமராஜரின் 120வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் காமராஜரின் திருவுருவ சிலை மற்றும் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை தியாகராயநகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டின் கல்வி கண் திறந்தவர்  காமராஜர், வருமையில் பசியோடு மாணவர்கள் படிக்க முடியாது என்பதற்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர்.

இதையும் படியுங்கள்: நேர்ல வர முடியல.. கண்டிப்பாக ஃபங்ஷனுக்கு வந்துடுங்க.. கொரோனா பாதிப்பிலும் பிரதமரை அழைத்த முதல்வர்

இதுவரை எவரும் செய்யாத கல்வி புரட்சியை செய்து காட்டியவர், தமிழ்நாட்டில் ஏராளமான தொழிற்சாலைகளை கொண்டு வந்து தொழில் புரட்சி செய்தவர் பல ஏரிகளை வெட்டி நீர்த்தேக்கங்களை உருவாக்கி சாதனை செய்தவர். அவரது பிறந்த நாளான இன்று அவருக்கு மரியாதை செய்வதில் பாமக பெருமை கொள்கிறது. விரைவில் காமராஜர் ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் பாமகவின் கனவு, நிச்சயமாக அதை பாட்டாளி மக்கள் கட்சி செய்து காட்டும், சென்னை விமான நிலையத்தில் காமராஜரின் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும் இல்லை என்றால் அதற்காக பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும், தற்போது அதிமுகவில் நடந்து வருவது அவர்களின் சொந்தக் கட்சி பிரச்சனை, உட்கட்சி பிரச்சினையில் நாங்கள் கருத்து கூற விரும்பவில்லை.

இதையும் படியுங்கள்: இந்த தனியார் பள்ளியில் என்ன நடக்குது.. 10 ஆண்டுகளில் பல மாணவிகள் மர்ம மரணம்.. பகீர் கிளப்பும் அன்புமணி.!

ஆனால் எதிர்வரும் 2026 தமிழ்நாட்டில் பாமக தலைமையில் கூட்டணி அமையும், அப்போது அனைவரும் சேர்த்து ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமிக்கு நாங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளோம். பாமக தலைமையில் கூட்டணி அமையும் என்றால் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்று அர்த்தமல்ல, இனி அடுத்து 10,15 ஆண்டுகளில் எந்த கட்சியும் தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது, எனவே எங்கள் இலக்கு என்பது 2026 இல் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது தான், காங்கிரஸ்காரர்கள் கூட காமராஜர் ஆட்சியை மறந்துவிட்டார்கள், ஆனால் பாமக தான் காமராஜர் ஆட்சி பற்றி தொடர்ந்து பேசி வருகிறது.

இப்போது மகாராஷ்டிரா கேரளாவில் வெள்ளம் வந்துகொண்டிருக்கிறது விரைவில் தமிழ்நாட்டிலும் நல்ல வரப்போகிறது, நீரை சேமிக்க வேண்டும், அதற்கு நாம் பல அணைகளை கட்ட வேண்டும், ஒரு டிஎம்சி கொள்ளளவு கொண்ட பத்து ஏரிகள் அவசியம், உருவாக்க வேண்டும் சென்னை மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஜனநாயகத்தின் அடிநாதம் என்பதே நாடாளுமன்றம் தான், அதில் இயல்பாக பேசுகிற வார்த்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, இதுபோன்ற நெருக்கடிகளை கொடுக்கக்கூடாது, எங்களது கருத்துக்களை எடுத்துச் சொல்ல அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

click me!