10 தொகுதிகளுக்கான பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு..!

By karthikeyan VFirst Published Mar 10, 2021, 9:40 PM IST
Highlights

அதிமுக கூட்டணியில் பாமக 23 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், தொகுதிகள் உறுதியானதையடுத்து, முதற்கட்டமாக 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாமக.
 

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது. ஆளும் அதிமுக, பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணிமைத்து தேர்தலை சந்திக்கிறது. பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இன்று எந்தெந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்பட்டது.

அதன்படி, செஞ்சி, மயிலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி(தனி), நெய்வேலி, திருப்பத்தூர், ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாசலம், காஞ்சிபுரம், கீழ்பென்னாத்தூர், மேட்டூர், சேலம் மேற்கு, சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, பூந்தமல்லி (தனி), கீழ்வேலூர் (தனி), ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) ஆகிய 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதிகள் உறுதியான நிலையில், முதற்கட்டமாக 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாமக. 

தருமபுரி - வெங்கடேஸ்வரன்

சேலம் மேற்கு - அருள்

செஞ்சி  - ராஜேந்திரன்

திருப்போரூர் - ஆறுமுகம்

ஜெயங்கொண்டம் - கே.பாலு

ஆற்காடு - இளவழகன்

திருப்பத்தூர் - ராஜா

பென்னாகரம் - ஜி.கே.மணி

ஆத்தூர்(திண்டுக்கல் மாவட்டம்) - திலகபாமா

கீழ்பென்னத்தூர் - செல்வகுமார்.
 

click me!