திருடன் கையில் சாவியை கொடுக்க நினைக்கும் திமுக.! கொலை, நில அபகரிப்பு என மக்களை அச்சுறுத்தும் ரவுடிக்கு சீட்டு

By karthikeyan VFirst Published Mar 10, 2021, 9:11 PM IST
Highlights

கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய, நில அபகரிப்பின் மூலம் பொதுமக்களை துன்புறுத்திவரும், பல்வேறு குற்ற வழக்குகள் பின்னணியை கொண்ட புதுச்சேரியை சேர்ந்த செந்தில் என்ற ரவுடிக்கு திமுக சீட்டு வழங்குகிறது.
 

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது. பாஜக - அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியும், திமுக - காங்கிரஸ் கூட்டணியும் மோதுகின்றன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜக கூட்டணி தான் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என தெரிவிக்கின்றன.

திமுக - காங்கிரஸ் கூட்டணி மீது ஏற்கனவே புதுச்சேரி மக்கள் அதிருப்தியில் இருப்பதால், அந்த கூட்டணியின் தோல்வி உறுதி. அந்த தோல்வியை இரட்டிப்பாக உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது திமுகவின் செயல்பாடு. கொலை, கொள்ளை, நில அபகரிப்பு என பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய லோக்கல் ரவுடி ஒருவருக்கு சீட்டு கொடுக்கிறது திமுக.

குற்றப்பின்னணி கொண்ட கிரிமினல்களுக்கு சீட் கொடுப்பது திமுகவில் புதிதல்ல என்றாலும், ஏற்கனவே புதுச்சேரி மக்கள் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்திருக்கும் நிலையில், தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப்போட்டு கொள்ளும் விதமாக, புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த ரவுடி செந்தில் என்பவருக்கு காலாப்பட்டு தொகுதியை வழங்கவுள்ளது திமுக.

புதுச்சேரியில் பல்வேறு கொலை, கொள்ளை, நில அபகரிப்பு குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வெகுஜனங்களை அச்சுறுத்திவருபவர் ரவுடி செந்தில். பல்வேறு குற்ற வழக்குகளில் சிறைசென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ள ரவுடி செந்தில், குண்டர் சட்டத்தில் கைதாகி அண்மையில் ரிலீஸ் ஆகியிருக்கிறார்.

குற்றங்கள் செய்வதை முழு நேர பணியாக வைத்துள்ள ரவுடி செந்தில், அரசியலிலும் இருப்பதால், ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் குற்ற வழக்குகளில் சிறை செல்வதை தவிர்க்கலாம் என்று திட்டம்போட்டு, அவர் சார்ந்திருந்த என்.ஆர்.காங்கிரஸில் சீட்டு கேட்டுள்ளார். 

அவர் சார்ந்த சமூகம் தான், புதுச்சேரியில் பெரும்பான்மையாக இருக்கும் சமூகம் என்பதாலும், அந்த சமூகம் சார்ந்த அமைப்பையும் நடத்திவருவதால், அந்த நம்பிக்கையில், என்.ஆர்.காங்கிரஸிடம், காலாப்பட்டு தொகுதியை தனக்கு ஒதுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் அந்த தொகுதியில், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைத்திருக்கும் பாஜக வேட்பாளரை நிறுத்துவதால், ரவுடி செந்திலுக்கு சீட் கொடுக்க முடியவில்லை.

அதனால் தனக்கு சீட் கொடுக்கும் கட்சிக்கு தாவ முனைந்த ரவுடி செந்திலுக்கு, அவர் விரும்பிய காலாப்பட்டு தொகுதியை ஒதுக்குவதாக திமுக உறுதியளிக்க, அந்த டீல் உறுதியானதால் திமுகவில் இணைந்தார் ரவுடி செந்தில். அரசியல் கட்சியின் பின்னணியை மட்டுமே வைத்துக்கொண்டு ஏகப்பட்ட குற்றங்களை செய்து புதுச்சேரி மக்களை அச்சுறுத்திவந்த ரவுடி செந்திலை எம்.எல்.ஏ ஆக்கி, அவரது ரவுடியிசத்திற்கு லைசென்ஸ் வழங்க முனைகிறது திமுக.

உண்மையாகவே மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சி திமுக என்றால், சாமானிய மக்களை அச்சுறுத்தும் ரவுடிக்கு சீட் வழங்க நினைக்குமா? என்பது புதுச்சேரி மக்களின் ஆதங்கமாக இருக்கிறது. ரவுடி செந்தில் எம்.எல்.ஏ-வானால் அது மிகப்பெரும் ஆபத்து. அவர் வெற்றி பெறுவதும் தோல்வியடைவதும் இரண்டாம் பட்சம். ஆனால் அவர் வெற்றி பெறுவது திருடன் கையில் சாவி கிடைப்பது போன்றது என்பதை உணர்ந்திருந்தும், அவருக்கு சீட் கொடுக்கும் திமுகவிற்கு, புதுச்சேரி மக்கள் கண்டிப்பாக தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
 

click me!