மதிமுக போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு... சாத்தூரில் களமிறங்குவாரா வைகோ மகன்.?

Published : Mar 10, 2021, 08:49 PM IST
மதிமுக போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு... சாத்தூரில் களமிறங்குவாரா வைகோ மகன்.?

சுருக்கம்

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, கொமதேக, தவாக உள்ளிட்ட கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் திமுக கூட்டணியில் மதிமுக 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.இந்த 6 தொகுதிகளிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே மதிமுக போட்டியிடுகிறது. மதிமுக போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது பற்றி திமுகவுடன் மதிமுக குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
இதனையடுத்து திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி வாசுதேவநல்லூர் (தனி), சாத்தூர், அரியலூர், பல்லடம், மதுராந்தகம் (தனி), மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சியினர் போட்டியிட உள்ளனர். சாத்தூர் தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோவும் மதுராந்தகம் தொகுதியில் மல்லை சத்யாவும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

PREV
click me!

Recommended Stories

Durga Puja: துர்கா பூஜை பந்தல்களில் அசைவ உணவா? VHP என்ன சொல்கிறது!
Free Training: விவசாயிகள், இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! தமிழ்நாடு அரசு தரும் இலவச பயிற்சி.! இனி லாபம் கொட்டப்போவது உறுதி.!