அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகளை கேட்கும் என்.ஆர் தனபாலன்.. பெரம்பூர் உறுதி என தகவல்.

Published : Mar 10, 2021, 07:53 PM IST
அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகளை கேட்கும் என்.ஆர் தனபாலன்.. பெரம்பூர் உறுதி என தகவல்.

சுருக்கம்

தாங்கள் கேட்கும் அந்த ஒரு தொகுதி கொங்கு மண்டலம் அல்லது தென் மாவட்டங்களில் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு மூன்று தொகுதிகள் தருவதாக அதிமுக  கூறியிருந்தது.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக கட்சியுடன் பெருந்தலைவர் மக்கள் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்தது. அதன்பின்  கட்சியின் தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தார். 

அவர் கூறியதாவது, பெரம்பூர் தொகுதி தங்களுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டதாகவும், தாங்கள் மேலும் ஒரு தொகுதி கேட்பதாகவும்,  அது பரிசீலிக்கப்பட்டு அதற்கான முடிவுகள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். 

அது தொடர்பாக அதிமுக சார்பில் தேர்தல் பொறுப்பாளர் கே.பி முனுசாமி மற்றும் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறினார். தாங்கள் கேட்கும் அந்த ஒரு தொகுதி கொங்கு மண்டலம் அல்லது தென் மாவட்டங்களில் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு மூன்று தொகுதிகள் தருவதாக அதிமுக  கூறியிருந்தது. ஆனால் அதற்கு தற்போது வாய்ப்பில்லை என்ற காரணத்தினால் இரண்டு தொகுதிகளை மட்டும் கேட்டு வலியுறுத்தியுள்ளதாக என்.ஆர் தனபாலன் கூறினார்.  

 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!