பக்கவாக ஸ்கெட்ச் போட்ட டிடிவி.. அமைச்சர் உதயகுமாருக்கு டஃப் கொடுக்க கெத்தான கட்சியை களமிறக்கிய அமமுக..!

Published : Mar 10, 2021, 07:38 PM IST
பக்கவாக ஸ்கெட்ச் போட்ட டிடிவி..  அமைச்சர் உதயகுமாருக்கு டஃப் கொடுக்க கெத்தான கட்சியை களமிறக்கிய அமமுக..!

சுருக்கம்

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமாருக்கு எதிராக திருமங்கலத்தில் அமமுக சார்பில் மருது சேனை சங்கத்துக்கு அத்தொகுதி ஒதுக்கீடு செய்து டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். 

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமாருக்கு எதிராக திருமங்கலத்தில் அமமுக சார்பில் மருது சேனை சங்கத்துக்கு அத்தொகுதி ஒதுக்கீடு செய்து டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். 

அதிமுக வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதனையடுத்து, இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 171 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியலை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இதில்,  திருமங்கலம் தொகுதியில் வருவாய்த்துறை அமைச்சருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அமமுக கூட்டணியில் உள்ள மருது சேனை சங்கத்துக்கு திருமங்கலம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருமங்கலம் தொகுதியை பொறுத்தவரை பெரும்பான்மையான அகமுடையார் சமுதாயத்தினர் வாக்குகள் இருப்பதால் அதை குறி வைத்தே மருது சேனைக்கு தொகுதியை ஒதுக்கீடு செய்து இருப்பதாக தெரிகிறது. இது, அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!