
தமிழகத்தில் அதிமுக, திமுக கூட்டணிகளுக்கு மாற்றாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவினரால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி , ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் கமலின் தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளன.
இந்த கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 154 தொகுதிகளும், சமத்துவ மக்கள் கட்சிக்கும் இந்திய ஜனநாயகக் கட்சிக்கும் தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக 70 பேரின் பெயர்கள் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார்.
அதன் படி சினேகன் விருகம்பாக்கம் தொகுதியிலும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் பணியாற்றிய பொன்ராஜ் அண்ணா நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.பத்மபிரியா - மதுரவாயல், ரமேஷ் கொண்டலசாமி - மாதவரம், பாசில் - ஆர்.கே.நகர், பொன்னுசாமி - பெரம்பூர் சந்தோஷ்பாபு - வில்லிவாக்கம், பிரியதர்ஷினி - எழும்பூர், சிநேகா மோகன்தாஸ் - சைதாப்பேட்டை, செந்தில் ஆறுமுகம் - பல்லாவரம் சிவ இளங்கோ - தாம்பரம், லாவண்யா - திருப்போரூர், முருகானந்தம் - திருவெறும்பூர், உமா தேவி - அருப்புக்கோட்டை உள்ளிட்டோர் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.