கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி...! சீட் கிடைக்காத அதிருப்தியில் அதிமுக சீனியர் அமைச்சர்கள்..!

By vinoth kumarFirst Published Mar 10, 2021, 7:04 PM IST
Highlights

31 அமைச்சர்களில் வளர்மதி, நிலோபர் கபில், பாஸ்கரன் ஆகிய மூன்று அமைச்சர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் அவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

31 அமைச்சர்களில் வளர்மதி, நிலோபர் கபில், பாஸ்கரன் ஆகிய மூன்று அமைச்சர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் அவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுக வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில் போடி தொகுதியில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி தொகுதியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி சண்முகம், ஸ்ரீ வைகுண்டம் தொகுதியில் எஸ்.பி சண்முகநாதன், மற்றும் நிலக்கோட்டை தொகுதியில் திருமதி தேன்மொழி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 171 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இதில், மொத்தமுள்ள 31 அமைச்சர்களில் வளர்மதி, நிலோபர் கபில், பாஸ்கரன் ஆகிய மூன்று அமைச்சர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள்;-

* ஆவடி - பாண்டியராஜன்
*  மதுரவாயல் - பென்ஜமின்
*  ஜோலார்பேட்டை - கே.சி.வீரமணி
*  பாலக்கோடு - கே.பி.அன்பழகன்
*  ஆரணி - சேவூர் ராமச்சந்திரன்
*  ராசிபுரம் - சரோஜா
*  குமாரபாளையத்தில் - தங்கமணி
*  பவானி - கருப்பணன்
*  கோபிச்செட்டிபாளையம் - செங்கோட்டையன்
*  தொண்டாமுத்தூர் - எஸ்.பி.வேலுமணி
*   உடுமலைப்போட்டை - உடுமலை ராதாகிருஷ்ணன்
*   திண்டுக்கல் - திண்டுக்கல் சீனிவாசன்
*   கரூர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்
*   திருச்சி கிழக்கு - வெல்லமண்டி நடராஜன்
*  கடலூர் - எம்.சி.சம்பத்
*   வேதாரண்யம் - ஓ.எஸ்.மணியன்
*  நன்னிலம் - காமராஜ்
*  விராலிமலை - விஜயபாஸ்கர்
*  மதுரை மேற்கு - செல்லூர் ராஜூ
*  திருமங்கலம் - ஆர்.பி.உதயகுமார்
*  கோவில்பட்டி - கடம்பூர் ராஜூ
*  சங்கரன்கோவில் - ராஜலட்சுமி
*  கடந்த முறை சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட ராஜேந்திரபாலாஜி இந்தமுறை ராஜபாளையத்தில் போட்டியிடுகிறார். 

click me!