BREAKING ராமதாஸ் கேட்டதை கொடுத்த எடப்பாடியார்... பாமக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியீடு.!

By vinoth kumarFirst Published Mar 10, 2021, 6:10 PM IST
Highlights

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்ட தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்ட தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக பாமகவுடன் தொகுதி பங்கீடு நிறைவுற்றது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியதால் அதிமுக-பாமக இடையேயான கூட்டணி சிக்கலின்றி முடிந்தது. அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டன. இட ஒதுக்கீடு கோரிக்கை ஏற்கப்பட்டதால், கூட்டணியில் முதன் முறையாக குறைந்த எண்ணிக்கையில் போட்டியிட பாமகவும் ஒத்துக்கொண்டதாக அன்புமணி ராமதாஸ்  தெரிவித்தார். 

இந்நிலையில் தொகுதிகளை குறைவாகப் பெற்றுக்கொண்டதால், தாங்கள் விரும்பும் தொகுதிகளைத் தர வேண்டும் என்று அதிமுகவிடம் பாமக கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பாமக தலைமை, 23 தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகளை வழங்க வேண்டும் என்ற உத்தேச பட்டியலையும் அதிமுகவிடம் வழங்கியது. இதனையடுத்து, இருகட்சி தலைவர்களும் ஆலோசனை நடத்திய பின்னர் பாமக போட்டியிடும் தொகுதிகளை வெளியிடப்பட்டுள்ளது. 

பாமக போட்டியிடும் தொகுதிகள் விவரம்

*  செஞ்சி
*  மயிலம்
*  ஜெயங்கொண்டம்
*  திருப்போரூர்
*  வந்தவாசி(தனி)
*  நெய்வேலி
*   திருப்பத்தூர்
*  ஆற்காடு
*  கும்மிடிப்பூண்டி
*  மயிலாடுதுறை
*  பென்னாகரம்
*  தருமபுரி
*  விருத்தாசலம்
*  காஞ்சிபுரம்
*  கீழ்பென்னாத்தூர்
*  மேட்டூர்
*  சேலம் மேற்கு
*  சோளிங்கர்
*  சங்கராபுரம்
*  சேப்பாக்கம் திருவல்லிக்கேணி
*  பூந்தமல்லி (தனி)
*  கீழ்வேலூர் (தனி)
* ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) ஆகிய 23 தொகுதிகளை பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

click me!