கலைஞரை மெரினாவில் புதைப்பதற்கு உதவியவர்கள் நாங்கள்; எங்களுக்கே தடையா? அன்புமணி ஆவேசம்

By Velmurugan s  |  First Published Aug 31, 2023, 8:46 AM IST

நாங்கள் இல்லையென்றால் கலைஞரை புதைப்பதற்கு மெரினாவில் இடம் கிடைத்திருக்காது. ஆனால் அதனை மறந்துவிட்டு பாமக 35ம் ஆண்டு துவக்க விழாவிற்கு தமிழக அரசு தடை விதித்திருப்பதாக அக்கட்சி தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார்.


பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அரியலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பாமகவின் 35ம் ஆண்டு துவக்க விழாவினை நடத்த தமிழக அரசு தடை விதித்தது கண்டனத்திற்குரியது. எங்களை வன்முறை கட்சி என்று பேசுகிறார்கள். நாங்கள் பேச ஆரம்பித்தாள் தாங்க மாட்டார்கள். கடந்த 35 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். 108 ஆம்புலன்ஸ் கொண்டு வந்தது, கிராம சுகாதார திட்டம் பல்வேறு ரயில்வே திட்டங்களை கொண்டுவர பாமக காரணமாக இருந்தது.

Tap to resize

Latest Videos

நாங்கள் இல்லை என்றால் கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்திருக்க முடியாது.  நாங்கள் போட்ட வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் மெரினா கடற்கரையில் கலைஞரை அடக்கம் செய்திருக்க முடியாது எனவும் தெரிவித்தார். பாமக தயவால் தான் 2006ம் ஆண்டு 96 எம்எல்ஏக்களை வைத்து கொண்டு  5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்கள். இதனை  ஆட்சியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

ஆசைக்கு இணங்க மறுத்ததால் பதவி பறிப்பு; திமுக எம்எல்ஏ மீது பெண் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு

என்எல்சிக்கு அடிமையாக திமுக அரசு இருந்து வருகிறது. என்எல்சி விவகாரத்தில் பாமக தொடர்ந்து பொதுமக்களுக்காக பாடுபட்டு வரும். ஸ்டெர்லைட் எதிராக திமுக செய்த வன்முறை சம்பவங்கள் போன்ற பல சம்பவங்களை சொல்ல முடியும். செப்டம்பர் மாதத்திற்குள் கர்நாடக அரசு காவிரியில்  60 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும். ஆனால், 2.5 டிஎம்சி தண்ணீர் தான் தந்து உள்ளது. தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்று பெற்று தரவேண்டும் என தெரிவித்தார்.

2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் கோவில் குடமுழுக்கு; ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட கலசங்கள்

அரியலூர் சோழர் பாசன திட்டத்தை திமுக அரசு விரைந்து தொடங்க வேண்டும். கேஸ் விலையை எப்போதோ குறைத்து இருக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையையும் குறைத்து இருக்க வேண்டும். 1.5 ஆண்டு காலமாக தரவுகளை சேகரித்து கொண்டு இருக்கிறார்கள். கலைஞர் இருந்து இருந்தால் கொடுத்து இருப்பார்கள். கலைஞர் ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்பவர்கள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இனியும் பொறுக்க முடியாது. விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் எனவும் பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

click me!