CM Stalin Podcast: ஆரம்பிக்கலாங்களா!! தெற்கிலிருந்து வரும் குரல்- பாஜகவை அலற விட தயாராகும் ஸ்டாலின்!!

By Ajmal Khan  |  First Published Aug 31, 2023, 8:42 AM IST

2024 முடியப்போற பாஜக ஆட்சி,  இந்தியாவை எப்படி எல்லாம் உருக்குலைத்திருக்காங்கஎதிர்காலத்தில் நாம கட்டமைக்க விரும்புகிற சமத்துவ சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும்னு ஒரு ஆடியோ சீரியஸ்ல பேச இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 


தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள்

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கி வருகிறது. ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து ஆட்சி அமைக்க பாஜக திட்டம் திட்டி நாடு முழுவதும் களப்பணியில் தொடங்கி உள்ளது. அதற்கு போட்டியாக நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு டப் கொடுக்க திட்டம் தீட்டியுள்ளது.  இதற்காக இந்தியா கூட்டணியின் இரண்டு கட்ட கூட்டம் பீகார் மற்றும் பெங்களூரில் கடந்த மாதம் நடைபெற்றது. 

Latest Videos

undefined

இண்டியா அணியின் முக்கிய கூட்டம்

இந்த கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் கலந்து கொண்டு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அடுத்த கட்ட கூட்டம் மும்பையில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி, நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, தமிழகம் அமைச்சர் முக ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் மும்பைக்கு செல்ல உள்ளனர். இந்த கூட்டத்தில் பாஜகவின் வியூகத்தை முறியடிக்கும் வகையில் திட்டமிடப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் மும்பை புறப்பட்டு செல்வதற்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  ஆரம்பிக்கலாங்களா... வணக்கம் கடந்த சில மாதங்களாக உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் கேள்வி பதில் வடிவில் உங்களிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டேன். திமுக 75 ஆண்டுகளை நெருங்கி கொண்டிருக்கும் பலம் பெரும் கட்சி,  

Awakening India's Tomorrow, A Southern Voice Speaks for ! pic.twitter.com/VqdY0PoxWF

— M.K.Stalin (@mkstalin)

 

இந்தியாவை சீர்குலைத்த பாஜக

இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி, பேரறிஞர் அண்ணா,  கலைஞர்னு இந்திய நிலப்பரப்பில் ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்களால உருவாக்கப்பட்ட உடன்பிறப்புகள் நாங்க, இப்போ இந்தியாவிற்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கோம். 2024 முடியப்போற பாஜக ஆட்சி,  இந்தியாவை எப்படி எல்லாம் உருக்குலைத்திருக்காங்கஎதிர்காலத்தில் நாம கட்டமைக்க விரும்புகிற சமத்துவ சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும்னு ஒரு ஆடியோ சீரியஸ்ல பேச போறேன் .

எதிர்காலத்துல நாம கட்டமைக்க நினைக்கிற சமத்துவ சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்க போகுதுன்னு ஒரு ஆடியோ சீரியஸில் பேச போகிறேன். அதற்கு ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என்ற தலைப்பை வைத்துக் கொள்ளலாமா.? தெற்கிலிருந்து வரும் இந்த குரலுக்காக காத்திருங்கள் என்ன முதலமைச்சர் மு க ஸ்டாலின் அந்த பதிவு தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடியின் திட்டங்கள் என்னென்ன? வெள்ளை அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை!

click me!