தமிழகத்தையே காப்பாத்த முடியல.. இவரு இந்தியாவை காப்பாத்த போறாராம்.. ஸ்டாலினை எகிறி அடிக்கும் இபிஎஸ்.!

By vinoth kumar  |  First Published Aug 30, 2023, 12:41 PM IST

தமிழகத்தை காப்பாற்ற முடியவில்லை இந்தியாவை காப்பாற்றுகிறார் முதல்வர். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனான் எனும் பழமொழியை போல் உள்ளது.


கொடநாடு தொடர்பாக வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு செய்தியை பரப்பி வருகின்றனர் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு விமான நிலையத்தில் பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர்;- சட்டமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன் அப்போது ஏன் முதல்வர் அமைதியாக இருந்தார். அதிமுக ஆட்சியின் போது நடைபெற்றதை மட்டும் குறிப்பிட்டு பேசுகிறார்கள். வேண்டுமென்றே அவதூறு செய்தியை பரப்புகிறார்கள். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதை நான் சட்டமன்றத்திலும் பேசி உள்ளேன். குற்றவாளியை கைது செய்தது அதிமுக தான். வழக்கு நடைபெற்றதும் எங்கள் ஆட்சியின் போது தான். குற்றவாளிகளுக்கு வாதாடுவதற்காக இருந்தது திமுக வழக்கறிஞர். குற்றவாளிகளுக்கு ஜாமீன் தருவதாக இருந்தது திமுகவினர் இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

Latest Videos

undefined

இதையும் படிங்க;- கொடநாடு என்றாலே பழனிசாமிக்கு ‘கொல நடுக்கம்’ ஏற்படுவது ஏன்.? அனைத்தும் சட்டப்படி விரைவில் நடக்கும்-முரசொலி

இந்த குற்றவாளிகள் ஏற்கனவே கேரளாவில் கொடும் குற்றம் புரிந்தவர்கள். அந்த வழக்கு நீதிமன்றத்தில்  நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு ஏன் திமுகவினர் ஜாமீன் வாங்க வேண்டும். கொரோனாவால் தான் காலதாமதம் ஆனது. வழக்கு 90% முடிந்ததாக தகவல். வேற வழி இல்லாமல் எங்கள் மீது எந்த குற்றமும் சுமத்த முடியாததால் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக இதை அடிக்கடி வெளியிடுகிறார்கள். நாங்கள் பதறவில்லை. 

தமிழகத்தை காப்பாற்ற முடியவில்லை இந்தியாவை காப்பாற்றுகிறார் முதல்வர். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனான் எனும் பழமொழியை போல் உள்ளது. அதிமுக எந்த கட்சிக்கும் எப்போதும் அடிமை கிடையாது திமுக தான் அடிமையாக இருக்கும். திமுகவில் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வரவேண்டும். மக்கள் மீது அக்கறை இல்லை. முதல்வர் நானும் டெல்டாகாரன் என்று கூறினார் வீர வசனம் கேட்பதற்கு நன்றாக இருந்தது ஆனால் நெட்பயிரு கருகியதற்கு என்ன தீர்வு கண்டீர்கள் என கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க;- பொதுக்குழுக்கு எதிராக மேல் முறையீடா? பட்டை நாமம் தான் கிடைக்கும்.!ஓபிஎஸ் அணியை அலறவிடும் திண்டுக்கல் சீனிவாசன்

சட்டமன்றத் தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள். நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் உள்ளது என்று சொல்கிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு வந்த பிறகு ஒரு பேச்சு. 2010ல் காங்கிரஸ் கட்சியின் போது தான் நீட் அரக்கன் கொண்டுவரப்பட்டது. 2021 இல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆயிரம் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு 27 மாதம் ஆகிவிட்டது. அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை என அறிவித்துவிட்டு தற்போது திமுக கதை கட்டி வருகிறது என  எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். 

click me!