தமிழகத்தில் மதுவிலக்கு துறையை மது விற்பனை துறை என பெயர் மாற்றலாம் - அன்புமணி காட்டம்

By Velmurugan s  |  First Published Jul 13, 2023, 4:35 PM IST

அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் 10 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என பாமக கூறிவ ரும் நிலையில், 10 இடங்களில் மணல் குவாரி அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது கண்டனத்திற்கு உரியது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.


அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசன திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி 5 லட்சம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தினை ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொன்னேரியில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல் கையெழுத்திட்டு  தொடங்கி வைத்தார். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கையெழுத்து இட்டனர். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் அரியலூரில் சோழர் பாசன திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் நீர் பாசன துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினேன். இதனையடுத்து பொன்னேரியை முழுமையாக தூர்வாரி கரைகளை பலப்படுத்தவும், பூங்கா அமைக்கவும் முதல் கட்டமாக 622 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் எனக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்கிறேன்.

Latest Videos

undefined

தக்காளி பெட்ரோலோடு போட்டி போடுகிறது; இனியும் வேடிக்கை பார்க்க வேண்டாம் - மத்திய அரசுக்கு உதயநிதி கோரிக்கை

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்ப்பாசன ஏரிகளையும் தூர் வார முதல் கட்டமாக 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். பொன்னேரியை தூர் வாரும்போது அதில் உள்ள மண்ணை சிமெண்ட் ஆலைகளில் பயன்பாடு முடிந்த  சுரங்கத்தை மூட பயன்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. 

விவசாய பயன்பாட்டிற்கு உகந்த வண்டல்  மண்ணாக இருப்பதால் இதனை விவசாய பயன்பாட்டிற்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என நீண்ட ஆண்டுகளாக விவசாயிகளும், பாமகவும் வலியுறுத்தி வருகிறது. 10 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பதே பாமகவின் நிலைப்பாடு. ஆனால் தடுப்பணைகளுக்கு பதிலாக பத்து இடங்களில் மணல் குவாரிகளை தமிழக அரசு திறந்து உள்ளது.

50 கிலோ தக்காளியை எப்படி 700 ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவது? இது திண்டுக்கல் சிக்கல்!!

ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்று எதிர் கட்சி தலைவராக இருந்த போது கூறிய மு க ஸ்டாலின் தற்பொழுது முதலமைச்சராக உள்ள நிலையில் அது குறித்து எந்த நிலைப்பாடும் தெரிவிக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் உள்ள மதுவிலக்கு துறை மது விற்பனையை எவ்வாறு அதிகரிக்கலாம் என பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. இதனால் மதுவிலக்கு துறை என்பதை மது விற்பனை துறை என பெயர் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

click me!