பாமக மாவட்ட செயலாளர் நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொலை.. திருநள்ளாறில் 144 நடை உத்தரவு.

Published : Oct 23, 2021, 09:19 AM ISTUpdated : Oct 23, 2021, 09:25 AM IST
பாமக மாவட்ட செயலாளர் நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொலை.. திருநள்ளாறில் 144 நடை உத்தரவு.

சுருக்கம்

ரியல் எஸ்டேட் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களையும் செய்து வந்தார், இவர் வெள்ளிக்கிழமை இரவு 10:45  மணி அளவில் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அருகே பிரதான சாலையில் நின்று கொண்டிருந்தார். 

பாமக மாவட்ட செயலாளர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதனால் திருநள்ளாறில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட பாமக செயலாளராக இருந்து வந்தவர் தேவமணி, இவர் திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் ஆவார், நீண்டகாலமாக  பாமக மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். அப்பகுதியில் மிகுந்த செல்வாக்கு மிக்கவராகவும் இருந்துவந்தார் அவர். ரியல் எஸ்டேட் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களையும் செய்து வந்தார். 

இதையும் படியுங்கள்: அண்ணாமலை.. இனி வேடிக்கை பாரக்க மாட்டேன்.. இடத்தையும் நேரத்தையும் குறி.. அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை.

இவர் வெள்ளிக்கிழமை இரவு 10:45  மணி அளவில் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அருகே பிரதான சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது சரசரவென இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், தாங்கள் வைத்திருந்த பயங்கரமான ஆயுதங்களால் தேவமணியை சரமாரியாக வெட்டினர். அவர்களிடமிருந்து தப்ப முயன்ற தேவமணி, சாலையில் ஓடினார், ஆனால் விடாமல் விரட்டிய அந்த கொலைவெறி கும்பல், கண்மூடித்தனமாக தேவ மணியை வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையும் படியுங்கள்: காயத்ரி ரகுராம் சறுக்கி விழுந்தபோது விலகிய புடவை.. ஆபாசமாக பதிவிட்ட திமுக பிரமுகர்.. காவல் ஆணையரிடம் புகார்.

இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி தலைமறைவானது, அதைக்கண்ட அப்பகுதி மக்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த தேவ மணியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். கொலைக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை, இதனால் காரைக்கால் முழுவதும் பதற்றம் நிலவிவருகிறது. திருநள்ளாறில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவருக்கு மனைவி ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். தப்பியோடிய கொலை கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

நீதிபதிகளை மிரட்ட வெட்கமில்லையா..? ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒன்று திரளும் நீதிபதிகள்..!
இந்தியா முழுவதும் பாகிஸ்தான் கொடியை ஏற்றுவோம்...! யாராலும் எங்களை தடுக்க முடியாது..! LET பயங்கரவாதி கொக்கரிப்பு..!