என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி; எங்கள் பலத்தை தமிழகம் 25ம் தேதி பார்க்கும் - பாஜக

By Velmurugan sFirst Published Feb 5, 2024, 4:40 PM IST
Highlights

வருகின்ற 25ம் தேதி திருப்பூரில் நடைபெறவுள்ள என் மண் என் மக்கள் யத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும், அன்று எங்களுக்கான அங்கீகாரத்தை தமிழகம் பார்க்கும் என்றும் பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் திருப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மாதப்பூரில் 25ம் தேதி  பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பாஜக மாநிலத்  தலைவர் அண்ணாமலையின் நடைபயணமான ’என் மண் என் மக்கள் யாத்திரை’ நிறைவு விழாவை பிரமாண்டமாக நடத்த உள்ளோம்.  

400 ஏக்கர் பரப்பளவில், அனைத்து அரசியல் கட்சிகளும் திரும்பி பார்க்கும் வகையில்  பிரமாண்ட பொதுக்கூட்டத்தை கூட்ட உள்ளோம். கட்சி சார்பில் 10 லட்சம் பேரும், பொதுமக்கள் சார்பில் 3 லட்சம் பேரென 13 லட்சம் பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 24ம் தேதி மாநிலத் தலைவர் அண்ணாமலை திருப்பூர் மாநகராட்சி தொடங்கி, புதிய பேருந்து நிலையம் வரை யாத்திரை மேற்கொள்கிறார். 25-ம் தேதி மதியதுக்கு மேல் நடக்கும்  பொதுக்கூட்ட நிகழ்வில் பிரதமர் மோடி பேசுகிறார்.

மாஸாக டிராக்டரில் வந்து உழவர்கள் பேரணியை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டின் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேசியத்தலைவர்களும் பங்கேற்பார்கள். தமிழகத்துக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர் மோடி. ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் சமூகம், பொருளாதாரம் மற்றும் அமைப்பு ரீதியாக மாற்றம் ஏற்படும். அடுத்த தேர்தலுக்காக பாஜக இல்லை. அடுத்த தலைமுறைக்கு தான் பாஜக. மத்திய இடைக்கால பட்ஜெட்டில் முதல்முறையாக நாட்டின் பாதுகாப்புக்கு செலவு செய்யும் தொகை குறைந்து, நாட்டின் முன்னேற்றத்துக்கு  அந்த தொகை செலவிடப்பட்டுள்ளது.  

பட்ஜெட்டில் உயர்கல்விக்கு ஒரு பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. திமுகவை கேள்வி கேட்கும் முதல்நிலை கட்சியாக தமிழ்நாட்டில் பாஜக உள்ளது. தமிழ்நாட்டில் அமைச்சர்கள் சிறையில் இருக்கிறார்கள்.  ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் திமுக சொல்லி உள்ள தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பொய்யை, தலைவர் அண்ணாமலை தனது சுற்றுப்பயணத்தில் சொல்லி வருகிறார்.  

அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாட்டில் அமைச்சரிடம் மடிபிச்சை ஏந்திய ஆசிரியை - சென்னையில் பரபரப்பு

ஹேமந்த் சோரன் குற்றம் செய்தததால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு வெவ்வேறு திசைகளில் உள்ளன.  காவல்துறை மீது பயம் இல்லாததால்  சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் சீர்குலைந்துள்ளது. நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதை வரவேற்கிறோம். பாஜகவின் ஹச்.ராஜா ’ஜோசப் விஜய்’ என்று சொன்னது, அன்றைய காலகட்டத்தை வைத்து சொன்னது. பாஜக  லட்சியத்துக்காக சென்று கொண்டிருக்கிறது.   மக்களின் அங்கீகாரத்தை வரும் 25-ம் தேதி பல்லடத்தில் நடக்கும் கூட்டத்தில் பார்ப்பீர்கள் என்று அவர் தெரிவித்தார்.

click me!