ஏப்ரல் 3வது வாரத்திற்குள் தேர்தல்.? கூட்டணிக்காக யாரிடமும் பேசச் சொல்லி வாசனை நாங்கள் அனுப்பவில்லை- அண்ணாமலை

By Ajmal KhanFirst Published Feb 5, 2024, 2:18 PM IST
Highlights

நாங்கள் கூட்டணி வேண்டாம் என்றால் அதிமுக ஏன் எங்களை பார்த்து கத்திக்கொண்டு இருக்கிறார்கள்?; நாங்கள் யாருக்கும் எதிரி அல்ல; எங்களை  பங்காளிகள் பகையாளிகளாக நினைத்தால் நாங்கள் பதில் சொல்ல மாட்டோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு

சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள  நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜக தலைமைத் தேர்தல் அலுவலகத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு பூஜைகள், கோ பூஜைகள் உடன் பாஜக கொடியை ஏற்றி இன்று காலை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து தொகுதி பொறுப்பாளர்களுடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன்,பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Latest Videos

வெற்றியின் விளிம்பில் பாஜக

இந்நிகழ்ச்சியில் மேடையில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தாய்ப்பசு மேய்ச்சலுக்கு சென்று மாலை திரும்பும்போது அதனை எதிர்பார்த்து கன்று காத்திருப்பது போல் பாஜக இந்த நாடாளுமன்றக் தேர்தலுக்காக காத்துள்ளது. 2019 போல இந்த முறையும் தேர்தல் அறிவிப்பு வந்தால் ஏப்ரல் 2வது , 3 வது வாரத்தில்  தமிழகத்தில் தேர்தல் நடக்கலாம். 183 தொகுதிகளை தாண்டிவிட்டது 'என் என் மக்கள் ' நடைபயணம். தமிழகத்தில் எந்த கட்சியும் இவ்வாறு தொகுதி வாரியாக நடைபயணம் சென்றதில்லை.

மத்திய அரசுத் திட்டப் பயனாளர்களை பல தரப்பினரையும் சந்தித்து வருகிறோம். 2026 ல் தமிழகத்தில் அரசியல் புரட்சி நடக்க உள்ளது. தமிழக மக்கள் இடையே மாற்று சக்தியாக , மக்கள் மனதை வென்ற கட்சியாக பாஜக மாறியுள்ளது. வெற்றியின் விளிம்பில் உள்ளது பாஜக. மறுபடியும் இதுபோன்ற காலம் தமிழக பாஜவினருக்கு  கிடைக்காது. காலம் நமக்கு  கனிந்து வந்துள்ளது.  இதுபோன்ற சூழல் தமிழகத்தில் ஒருபோதும் நமக்கு கிடைக்காது என கூறினார். 

25 ஆம் தேதி தமிழகம் வரும் மோடி

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் நிறைவு விழா பல்லடத்தில் 25 ம் தேதி பிரதமர் பங்கேற்கிறார். 5 லட்சம் இருக்கைகள் போடப்பட உள்ளன. 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள்.மிகப்பெரும் எழுச்சி மாநாடாக நடைபெறும். யார் வேட்பாளர் என்பதை நாடாளுமன்ற குழுவே அறிவிக்கும். கூட்டணி பேச்சுவார்த்தை என்பது கடினமானது , திமுகவினரே கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தடுமாறி வருகின்றனர். பேச்சுவார்த்தைக்கு  இன்னும் நேரம் உள்ளது. பிரதமர் மோடியை ஏற்கும் அனைவரும் பாஜகவுடன் கூட்டணிக்கு வருவார்கள். இம்மாத இறுதிக்குள் கூட்டணி பற்றி தெரியவரும்.  இந்த தேர்தலில் பாஜக வாக்கு வங்கி எல்லோரும் திரும்பி பார்க்கும் வகையில் இருக்கும். 

 வாசனை கூட்டணி பேச அனுப்பவில்லை

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பல தொகுதியில் முதலிடத்தில் வரும். பாஜக சில தொகுதிகளில் மட்டுமே நிற்கும் என்ற நிலை மாறிவிட்டது , தமிழகம் முழுவதும் பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம். மாற்றுக் கட்சியினரும் மோடிக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். 2014 லேயே பாஜக கூட்டணியை உருவாக்கி 19 சதவீதம் பெற்றது , அந்த தேர்தலில்  திமுக 25 சதவீதம்தான் பெற்றது. அதன் பிறகு அந்த கூட்டணி தொடரவில்லை. 2024 தேர்தலை பொறுத்திருந்து பார்ப்போம். எ

த்தனை தொகுதியில் போட்டியிடுவோம் என்ற கருத்தை இப்போதே கூற முடியாது. 39 தொகுதியிலும் ஏற்றத் தாழ்வு இன்றி பணிசெய்கிறோம். ஜி.கே.வாசன் என்னிடம் தொடர்ந்து பேசி வருகிறார் , அவர் தொண்டர்கள் எங்கள் யாத்திரையிலும் பங்கேற்கிறோம். யாரிடமும் பேச்ச் சொல்லி வாசனை நாங்கள் அனுப்பவில்லை. நாங்கள் எங்கள் வேலையை செய்கிறோம். இன்னொரு கட்சியுடன் ஜி.கே.வாசன்  பேசுவதை நாங்கள் தடுக்க முடியுமா..? பரஸ்பரம் நட்பாக அவர்கள் பேசிக் கொள்வார்கள். 

சங்கராச்சாரியார்களை அழைக்காதது ஏன்.?

கானா பிரதிஷ்டையில் பிரதமர் பங்கேற்றதால் சங்கராச்சாரியார்கள் அங்கு செல்லவில்லை என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். உதயநிதிக்கு   சங்கராச்சாரியார்கள் மீது  திடீர் பாசம் ஏன்...?  சங்கராச்சாரியார்கள் மீது பாசம் இருந்தால் தமிழகத்தில் நடக்கும் குடமுழுக்கு விழாக்களுக்கு சங்கராச்சாரியார்களை  உதயநிதியும் முதலமைச்சரும் ஏன் அழைப்பதில்லை என அண்ணாமலை கேள்வி எழுப்பினார். 

இதையும் படியுங்கள்

களத்தில் இறங்கிய பாஜக... எச்.ராஜா தலைமையில் தேர்தல் அறிக்கை குழு.. 38 குழுக்களின் பட்டியலும் வெளியீடு

click me!