பெண்களுக்கு பிரதமர் மோடி தரும் மரியாதையை பாருங்கள்... நெகிழ்ச்சி வீடியோவை பகிர்ந்த வானதி சீனிவாசன்..!

By vinoth kumarFirst Published Jul 16, 2021, 9:33 AM IST
Highlights

பிரதமரின் காலில் விழ ஒரு பெண் முயன்றுள்ளார்.  இதை பார்த்தது சுதாரித்து விலகிய மோடி, அப்பெண்ணை நோக்கி குணிந்து பதில் மரியாதை செலுத்தினார். 

தனது காலில் விழ முயன்ற பெண்ணுக்கு பிரதமர் மோடி பதில் மரியாதை செய்த வீடியோவை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் நெகிழ்ச்சியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தல் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி ரூ. 1500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 100 படுக்கைகள் கொண்ட தாய் மற்றும் குழந்தை மருத்துவப் பிரிவு, கோடௌலியாவில் பல அடுக்குகள் கொண்ட வாகன நிறுத்தம், கங்கை ஆற்றில் சுற்றுலா வளர்ச்சிக்காக கப்பல் போக்குவரத்து, வாரணாசி காசிபூர் நெடுஞ்சாலையில் மூன்று வழி மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

முன்னதாக, இந்த திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வாரணாசி விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடியை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், விமானத்தின் அருகே வரிசையாக காத்திருந்து ஒவ்வொருவரும் மோடிக்கு வணக்கம் தெரிவித்து வரவேற்க, பதிலுக்கு மோடியும் அவர்களை பார்த்து கும்பிட்டபடி வணக்கம் தெரிவித்தார். 

அப்போது, பிரதமரின் காலில் விழ ஒரு பெண் முயன்றுள்ளார்.  இதை பார்த்தது சுதாரித்து விலகிய மோடி, அப்பெண்ணை நோக்கி குணிந்து பதில் மரியாதை செலுத்தினார். 

Our Hon'ble PM Shri bowing down before a women when she tries to touch his feet shows his great respect for women. pic.twitter.com/FKVLj5rQ5c

— Vanathi Srinivasan (@VanathiBJP)

இது தொடர்பான வீடியோவை  பாஜக மகளிரணியின் தேசிய தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன்  தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தனது காலை தொட்டு கும்பிட வந்த பெண்ணை தடுத்ததோடு.. அந்தப் பெண்ணின் முன்பாக வளைந்து குனிந்து கும்பிட்டார் பிரதமர் மோடி. பெண்கள் மீது மோடி வைத்திருக்கக்கூடிய மரியாதையை இந்த வீடியோ காண்பிக்கிறது என்று நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

click me!