82,000 தெரு நாய்களுக்கு கருத்தடை.. இலக்கு நிர்ணயித்தது சென்னை மாநகராட்சி.. 9.18 கோடி நிதி.

By Ezhilarasan BabuFirst Published Jul 16, 2021, 9:30 AM IST
Highlights

தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பட்டாம்பூச்சி வடிவிலான வலையை பயன்படுத்தி நாய்களை பிடித்து, வாகனங்களில் ஏற்றி, கருத்தடை செய்யும் மையத்திற்கு கொண்டு செல்கின்றனர். 

சென்னையில் உள்ள  நாய் இனக் கருத்தடை மையங்களை 9.18 கோடி  ரூபாய் செலவில் மேம்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் லாயிட்ஸ் காலனி, புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை ஆகிய மூன்று இடங்களில் அமைந்து இருக்கும் சென்னை மாநகராட்சி செல்லப்பிராணியகம், மருந்தகம் மற்றும் நாய் இனக் கருத்தடை மைய்யதை  9 கோடி 18 லட்சத்தி 69 ஆயிரம் ரூபாயில் செலவில் மேற்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இரவு நேரங்களில் தெரு நாய்கள் தெருவுக்கு பாதுகாவலனாக இருந்தாலும், அந்நேரங்களில் பயணிப்போருக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கின்றன. இவற்றால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பலர் நாய்கடியால் பாதிக்கப்பட்டனர். 2018 கணக்கு படி சென்னையில் 57,366 தெரு நாய்கள் இருந்தது. 

தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பட்டாம்பூச்சி வடிவிலான வலையை பயன்படுத்தி நாய்களை பிடித்து, வாகனங்களில் ஏற்றி, கருத்தடை செய்யும் மையத்திற்கு கொண்டு செல்கின்றனர். ஒரு தெருநாய்க்கு கருத்தடை செய்தால், கிட்டத்தட்ட 5 நாட்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு பின்னர், அதனை பிடித்த இடத்திலேயே மீண்டும் கொண்டு சென்று விட்டுவிடுவர். இந்த கண்கணிப்பின் போது நாய்களுக்கு உணவு, பராமரிப்பு பணி என அனைத்தும் மாநகராட்சி செய்து வருகிறது. நாய்களுக்கு கருத்தடை செய்ய சென்னையில் லாயிட்ஸ் காலனி, புளியந்தோப்பு, கண்ணம்மாபேட்டை ஆகிய மூன்று மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் 1 மாநகராட்சி மருத்துவர், ஒரு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் என 5 நபர்களுக்கு மேல் இருப்பார்கள். இது தவிர ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா மற்றும் எம்.எஸ்.பி.சி.ஏ ஆகிய இரு தொண்டு நிறுவனங்களிலும் மாநகராட்சி உதவி உடன் கருத்தடை செய்து வருகிறது.  

 

மாநகராட்சி கணக்குப்படி 2020- 2021 ஆண்டு மட்டும் 10,193 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மார்ச் மாதத்தில் 1353 தெருநாய்களுக்கும், பிப்ரவரி மாதம் 1242 தெருநாய்களுக்கும்  கருத்தடை செய்யப்பட்டுள்ளது 2021-2022 இந்த ஆண்டு நிலவரப்படி மேமாதத்தில் 953 தெருநாய்களுக்கும், ஜூன் மாதத்தில் 1084 என மொத்தம் 3012 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கருத்தடை செய்யப்படும் நாய்களுக்கு  தெருநாய்களுக்கு வெறி பிடிக்காமல் இருக்க தடுப்பூசியும், அக, புற ஒட்டுண்ணி நீக்க போடப்படுகிறது. இது வரை 68,877 நாய்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 3வது மண்டலத்தில் 8846 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  

தற்போது இந்த 3 மையத்தின் கட்டமைப்பை 9 கோடி 18 லட்சத்தி 69 ஆயிரம் ரூபாயில் செலவில் மேற்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த கட்டமைப்பு வசதியில் 3 மையங்களின் கட்டடத்தை 2 அடுக்கு கட்டடமாக மாற்றப்பட உள்ளது. தற்போது ஒரு மாதத்திற்கு தோராயமாக 1200 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. இந்த கட்டமைப்பு வந்த உடன் ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 3000 தெருநாய்க்களுக்கு கருத்தடை செய்யப்படும் எனவும் இந்த கட்டமைப்பை 6 மாதத்தில் முடித்து 2 ஆண்டுக்குள் 82,000 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதே மாநகராட்சி நோக்கம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.தெருநாய்கள் முறையாக பிடிக்கப்பட்டு கருத்தடை சிகிச்சையோடு, வெறி பிடிக்காமல் இருக்க தடுப்பூசியும் போடப்படுவதால் கடந்த 4 ஆண்டுகளில் சென்னையில் ரேபிஸ் நோயால் ஒருவர் கூட இறக்கவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 

click me!