
தமிழகம் மட்டுமின்றி உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை. சீனாவில் உற்பத்தியாகி, இந்தியா முழுவதும் டன் கணக்கில் வினியோகம் ஆகியுள்ளதாக தகவல் பரவியுள்ளது.
குறிப்பாக பெங்களூர், கேஜிஎப், பங்காருபேட்டை ஆகிய பகுதிகளில் அதிகளவு பிளாஸ்டிக் அரிசி விற்பனையாகி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி மற்றும் சர்க்ரை விற்பனை கனஜோராக நடந்து வருவதாக வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் சில சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.
இதை அமைச்சர் காமராஜ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி அல்லது சர்க்கரைக்கு இடமே இல்லை என உறுதிபட தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் அரிசி அல்லது சர்க்கரை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிளாஸ்டிக் அரிசி விற்பவர்கள் மற்றும் சப்ளை செய்பவர்கள் மீது, எடுக்கப்படும் நடவடிக்கை மிக பெரியளவில் இருக்கும் என்பதை தெரிவித்து கொள்வதாக அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.