ஒபிஎஸ் ஒரு பச்சை துரோகி ; ஆள்காட்டி – சம்பந்தம் இல்லாமல் சகட்டுமேனிக்கு பேசும் நாஞ்சில் சம்பத்...

 
Published : Jun 08, 2017, 10:56 AM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
ஒபிஎஸ் ஒரு பச்சை துரோகி ; ஆள்காட்டி – சம்பந்தம் இல்லாமல் சகட்டுமேனிக்கு பேசும் நாஞ்சில் சம்பத்...

சுருக்கம்

Ops is green traitor - said by nanjil sampath

ஒ.பி.எஸ் ஒரு பச்சை துரோகி எனவும் அவரும் சில நாட்களில் தினகரனிடம் வந்து தஞ்சம் அடைவார் எனவும் அதிமுக அம்மா அணி நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இருந்தபோது தீவிர விசுவாசியாக திகழ்ந்தவர் நாஞ்சில் சம்பத். அதனால் ஜெயலலிதா தரப்பில் இருந்து அவருக்கு இன்னோவா கார் வழங்கப்பட்டது. அதிலிருந்து இன்னோவா நாஞ்சில் சம்பத் என அழைக்கபட்டார்.

இதையடுத்து ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா கட்சிக்கு தலைமையேற்றதும் ஜெயலலிதா அளித்த காரை தலைமை செயலகம் சென்று ஒப்படைத்து விட்டு வந்தார்.

இதனால் மக்கள் பெரும்பாலோனோருக்கு அவர் மீது மரியாதை வந்தது. ஆனால் சிலநாட்களிலேயே அதை தவிடு பொடியாக்கினார் நாஞ்சில்.

சசிகலாவுக்கு எதிராக ஒ.பி.எஸ் போர்க்கொடி தூக்கிய போது அவரை நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்தார். அதிலிருந்து சசிகலாவுக்கு சப்பை கட்டு கட்ட ஆரம்பித்தார் நாஞ்சில் சம்பத்.

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதும் அவருக்கு பதிலாக துணை பொறுப்பேற்ற தினகரனுக்கு மாறி மாறி பேட்டியளித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

பின்னர், இரட்டை இலை விவகாரத்தில் தினகரன் சிறைக்கு சென்றதும் அவருக்கு எதிராக அமைச்சர்களே பேட்டியளிக்கும்போது நெஞ்சில் மட்டும் ஆதரவாக பேட்டியளித்தார்.

மேலும் பெட்டியளிக்கும்போதேல்லாம் முன்னாள் முதலமைச்சர் ஒ.பி.எஸ்ஸை திட்டாமல் அவர் இருந்ததே இல்லை.

தினகரன் ஜாமினில் வெளியே வந்த பிறகு கட்சியில் நீடிப்பேன் என கூறியதற்கு எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒ.பி.எஸ் ஒரு பச்சை துரோகி எனவும் அவரும் சில நாட்களில் தினகரனிடம் வந்து தஞ்சம் அடைவார் எனவும் தெரிவித்தார்.

மேலும் இன்னும் 6௦ நாட்களில் கட்சி ஒன்றாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!