பன்னீர் கூட்டத்தை தடுப்பது எப்படி?: ரூம் போட்டு யோசிக்கும் பழனி அண்ட்கோ...

Asianet News Tamil  
Published : Jun 08, 2017, 10:29 AM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
பன்னீர் கூட்டத்தை தடுப்பது எப்படி?: ரூம் போட்டு யோசிக்கும் பழனி அண்ட்கோ...

சுருக்கம்

Edapadi palanisamy and team planing against Panneerselvam

உணவுப் பஞ்சத்தை பற்றிய பொதுக்கூட்டம்  பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் போது மேடையை சுற்றி பட்டாணி சுண்டல் விற்பனை செம சூடாக நடந்து கொண்டிருக்கும். உலகத்தில் ஆயிரம் பஞ்சாயத்துகள் இருந்தாலும் அவரவருக்கு அவரவர் கவலை!
இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது அ.தி.மு.க.விற்குள் நடக்கும் உட்கட்சி பஞ்சாயத்துக்களும்.

தினகரனுடன் எடப்பாடி கோஷ்டி சமாதானம் ஆகுமா? ஓ.பி.எஸ். உடன் ஈ.பி.எஸ். சேருவாரா? அறுபது நாட்கள் லீவை 60 நாட்களாக தினகரன்  மாற்றமாட்டாரா? என்று ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகள் அக்கட்சியை பிய்த்து தின்று கொண்டிருக்கின்றன. 

இவிங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து கட்சியை ஸ்திடப்படுத்திட மாட்டாங்களா? என்று தொண்டனோ ஒரு பக்கம் ஏங்கிக் கொண்டிருக்கிறான். 

இதெல்லாம் மெயின் பிக்சராய் போய்க் கொண்டிருக்கும் நிலையில் சைடில் சண்டை போடுவதை மட்டும் பன்னீர் டீமும், பழனி அண்ட்கோவும் நிறுத்தவேயில்லை. 

தனது அணியின் சார்பாக ஒவ்வொரு மாவட்டமாக பன்னீர் செல்வம் செயல்வீரர்கள் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். இது மிகப்பெரிய எழுச்சி எதையும் தந்துவிடவில்லை தான். இருந்தாலும் கூட பன்னீரின் கூட்டத்துக்கு கூட்டம் கூடி பந்தாவாகிவிட கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கிறது பழனியின் அணி.

இதற்காக அவர்கள் செய்யும் ஜெகஜால கில்லாடித்தனங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. இதற்காக அந்தந்த மாவட்டத்தின் அரசு பங்களாவில் ரூம் போட்டு படுத்துப் புரண்டு யோசிக்கிறார்கள். 

அப்படி ஒர்க் அவுட் செய்ததில் அவர்கள் மனதில் உதித்த மெகா பிளான்களில் சிலவற்றை பார்ப்போம்...

*    பன்னீரின் கூட்டத்திற்கு எங்கே மைக் செட், ஸ்பீக்கர் இத்யாதிகளை வாடகைக்கு எடுக்க முடிவெடுத்திருக்கிறார்களோ அந்த நிறுவனத்தை முதலில் செல்லமாகவும், அப்புறம் அன்பாகவும் தடுத்துப் பார்க்கிறார்கள். முடியாத பட்சத்தில் மிரட்டல்தான். 

*    மாவட்ட காவல்துறையிடம் சொல்லி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்கும் மைதானங்களில் பாதுகாப்பு காரணங்களை சொல்லி அனுமதி மறுக்க வைப்பது, பின் மிக மொக்கையான ஸ்பாட் ஒன்றை போலீஸை விட்டே பரிந்துரைப்பது. 

*    ஒரு இடத்தில் நடக்கும் கூட்டத்திற்காக பல மாவட்டங்களில் இருந்து எடுக்கப்படும் வாடகை வேன், கார்களின் உரிமையாளகளுக்கு போன் போட்டு ‘நாங்கதான் சொல்றோம்ல. அந்தன்னைக்கு ஃபேமிலியோட டூர் போயிடுங்க நண்பா. செலவ நாங்க பார்த்துக்குறோம்.’ என்று பேக் செய்து அனுப்பிவிடுதல்.

*    ஒன்றியம், கிளை, நகர அளவில் பன்னீர் அணியில் கில்லியாக நின்று பொதுக்கூட்டத்திற்கு ஆள் சேர்க்கும் நபர்களிடம் ‘அடுத்து நம்ம தொகுதியில பத்து லட்ச ரூபாய் காண்ட்ராக்ட் ஒண்ணு வருது. எடுத்துக்குங்க தம்பி. எப்போதான் நீங்களும் செட்டிலாகுறது!’ என்று அடேங்கப்பா பாசம் காட்டி அடக்குவது.

*    ’துடிப்பாக நிற்கும் மகளிரணி நிர்வாகிகளின் வீட்டுக்காரர்களிடம் மூன்றாவது பொது நபரை விட்டு பேச வைக்கிறார்கள் இப்படி... ‘ரெண்டு டீமும் முட்டிக்கிட்டு நிக்குறாங்க. பொதுக்கூட்டத்துலேயே கலவரம் வெடிக்குமுன்னு பேசிக்கிறாங்க. எதுக்குங்க நம்ம வீட்டு பொம்பளைங்களை அங்கிட்டு அனுப்பணும்? நாம என்ன அப்படி விட்டுடுற ஆளுங்களா வீட்டு பொம்பளைங்களை!’ என்று அக்கறையாக மிரட்டுவது.... என்று வெரைட்டியாக யோசித்து, கூட்டத்துக்கு வர இருப்பவர்களை வெட்டிவிடும் வேலை நடக்கிறது.

இதையெல்லாம் தாண்டித்தான் பன்னீரின் கூட்டங்கள் நடக்கின்றன. ஆனாலும் இந்த கூட்டங்களில் வரவர பன்னீரின் பேச்சு பெரிதாக களை கட்டுவதுமில்லை, உற்சாகம் காட்டுவதுமில்லயாம். 

போதாக்குறைக்கு அதிரடி பேச்சாளர் அண்ணன் முனுசாமியையும் இப்போதெல்லாம் பேசவிடாமல் முக்காடு போட்டு மூலையில் உட்கார வைத்துவிடுகிறார்களாம். இது தொண்டர்களை ஏகத்துக்கும் எரிச்சலாக்கி இருக்கிறதாம். 
பன்னீர் சார்! சட்டுபுட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க. 
 

PREV
click me!

Recommended Stories

திமுகவுக்கு டாடா.. விஜய்யுடன் 'கை' கோர்க்கும் காங்கிரஸ்.. தவெகவுடன் முடிந்த ரகசிய டீல்?
சொந்த வீடும் இல்லை; காரும் இல்லை.. வெறும் ரூ.2,000-ல் வாழ்க்கை நடத்திய ஐயா நல்லகண்ணு.. அரசியலில் ஓர் அதிசயம்!