வீர வசனம் பேசிவிட்டு நீங்களே இப்படி செய்யலாமா? டிடிவி கேட்ட ஒரே கேள்வி.. திக்குமுக்காடிய திமுக..!

By vinoth kumarFirst Published Oct 31, 2021, 1:05 PM IST
Highlights

எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது இப்பிரச்னையில் கொண்டிருந்த நிலைப்பாட்டையே, முதல்வராக இருக்கும் ஸ்டாலின் செயல்படுத்த வேண்டும்.மேலும் இதுபோன்ற சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தில் உள்ள குறைகளைச் சரி செய்து சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா பகுதியில் பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான தமிழக அரசின் ஏல அறிவிப்புக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களில் ராட்சத கிணறுகள் அமைத்து பெட்ரோல் கேஸ் எடுத்து வருகிறது. இதனால் இப்பகுதிகளில் நிலத்தடிநீர் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, காற்று மற்றும் மண் உள்ளிட்டவைகள் மாசடைந்து நஞ்சாகியுள்ளது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. 

இதையும் படிங்க;- எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது.. நடுரோட்டில் காதலிக்கு சதக் சதக்.. இறுதியில் இளைஞர் செய்த பகீர்

இதுபோன்ற ஆபத்தான திட்டங்கள் இங்கு வராமல் தடுக்கும் நோக்கத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது. இந்நிலையில், கொஞ்சமும் எதிர்பாராத பேரிடியாக காவிரி டெல்டாவை, பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டம் நாகப்பட்டினம் பகுதியில் ரூ.31,580 கோடியில் ஆண்டுக்கு 90 லட்சம் டன் சுத்திரிப்பு திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்தியன் ஆயில் நிறுவனமும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனமும் இணைந்து அமைத்து வருகின்றன. இதன் கட்டுமானப் பணிகள் 45 மாதங்களில் நிறைவடையும்.

மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெட்ரோ கெமிக்கல் தொழில் மண்டலத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொழில் முதலீட்டு கழகம் மேற்கொண்டுள்ளது. சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனம் இந்த பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை கோரியிருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த அறிவிப்பு காவிரி டெல்டா விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ராமதாஸ், டிடிவி.தினகரன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  

இதையும் படிங்க;- மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற விபச்சார தொழில்... 21 வயது இளம் பெண்கள் மீட்பு..!

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- காவிரி டெல்டாவில் புதிய பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான ஏல அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

எதிர்க் கட்சியாக இருக்கும்போது விவசாயத்திற்கு ஆதரவானவர்கள் போலக் காட்டிக்கொண்டு வசனம் பேசுவதையும், ஆட்சிக்கு வந்ததும் விவசாயத்திற்கு எதிரான (ஹைட்ரோ கார்பன் போன்ற) திட்டத்திற்குக் கையெழுத்து போடுவதையும் திமுக வாடிக்கையாக வைத்திருக்கிறது. அந்த வரிசையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான அறிவிப்பைத் திமுக அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும்.

எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது இப்பிரச்னையில் கொண்டிருந்த நிலைப்பாட்டையே, முதல்வராக இருக்கும் ஸ்டாலின் செயல்படுத்த வேண்டும். மேலும் இதுபோன்ற சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தில் உள்ள குறைகளைச் சரி செய்து சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

click me!