திமுக முக்கிய அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!

Published : Oct 31, 2021, 10:04 AM ISTUpdated : Oct 31, 2021, 10:08 AM IST
திமுக முக்கிய அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!

சுருக்கம்

கடந்த 2005ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் 131வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது திமுகவினர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதாகவும், தன்னுடைய காரை தீ வைத்து எரித்ததாகவும் அதிமுக நிர்வாகி சந்தோஷ் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக தற்போதைய தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் 131வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது திமுகவினர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதாகவும், தன்னுடைய காரை தீ வைத்து எரித்ததாகவும் அதிமுக நிர்வாகி சந்தோஷ் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில், தற்போது அமைச்சர்களாக இருக்கும் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் இவர்களோடு சேர்த்து மொத்தம் 23 பேர் சேர்க்கப்பட்டனர்.

இதையும் படிங்க;- ஆடிட்டர் குருமூர்த்தி மீதான புகார்.. ஆறப்போட்ட அதிமுக.. அதிரடி காட்டிய திமுக..!

இந்நிலையில், இவ்வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியம் ஆகியோரது சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நேற்று நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ;- 2005ஆம் ஆண்டு ஆளும்கட்சியாக இருந்த அதிமுகவைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டது. 16 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் விசாரணையே தொடங்கவில்லை. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இதையும் படிங்க;- அதிமுக சுக்குநூறாய் தகர்ந்துவிடும்... எடப்பாடி -சசிகலாவுக்கு ஜெ. உதவியாளர் எச்சரிக்கை..!

காவல்துறை தரப்பில், மனுதாரர்கள் இந்த காரணங்களை எல்லாம் விசாரணை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம். இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் சந்தோஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்;- அப்போது வாக்குச்சாவடி முகவராக இருந்த நான் என் காரை சைதாப்பேட்டை பாரதிதாசன் தெருவில் நிறுத்தியிருந்தேன். அன்றைய தினம் காலை 10 மணிக்கு கார் தீப்பற்றி எரிந்து விட்டதாக தகவல் வந்தது. கார் தீ பிடித்ததற்கு யார் காரணம் என்று தெரியவில்லை. அரசியல் மற்றும் தேர்தல் பகையின் காரணமாகத் தவறுதலாக மனுதாரர்களின் பெயரைக் குறிப்பிட்டு விட்டேன். தற்போது இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த விரும்பவில்லை. இந்த வழக்கை ரத்து செய்வதில் எனக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க;-  மாமியாருடன் அடிக்கடி உல்லாசம்.. எவ்வளவு சொல்லியும் கன்டினியூவான கள்ளக்காதல்.. இறுதியில் மருமகன் செய்த காரியம்

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, புகார்தாரரே கார் எப்படி தீ பிடித்தது என்று தெரியவில்லை எனச் சொல்கிறார். அரசியல் பகை காரணமாக மனுதாரர்களின் பெயரைச் சேர்த்து விட்டதாகவும் அவர் கூறுகிறார். எனவே ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆகியோர் மீதான வழக்கை ரத்து செய்வதாக நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தது.

இதையும் படிங்க;-சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது பற்றி ஓபிஎஸ் பேசியது சரிதான்.. அதகளப்படுத்தும் ஜே.சி.டி.பிரபாகர்..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் பாகிஸ்தான் கொடியை ஏற்றுவோம்...! யாராலும் எங்களை தடுக்க முடியாது..! LET பயங்கரவாதி கொக்கரிப்பு..!
ஊராட்சி செயலாளர் பணியிலும் மோசடி..! திமுக அரசில் ஊழல் நடைபெறாத துறையே இல்லை..! அண்ணாமலை ஆவேசம்..!