திடீர் மூச்சுத்திணறல்.. கே.பாலகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. முன்மாதிரியாக திகழும் தோழர்கள்.!

By vinoth kumarFirst Published Oct 31, 2021, 12:30 PM IST
Highlights

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்(65) சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மீட்டு குடும்பத்தினர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்(65) சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மீட்டு குடும்பத்தினர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க;- தவறான சிகிச்சை... கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் துடிதுடித்து உயிரிழப்பு..!

அவரது உடல்நிலை குறித்து முழு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே, எதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்பது குறித்துத் தெரிய வரும். மேலும், மருத்துவ பரிசோதனை முடிவுகளை வைத்தே அவர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது தெரியவரும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க;- காதல் கணவர் விபத்தில் உயிரிழப்பு.. உடலை பார்த்து கதறிய மனைவி.. அடுத்த நிமிடமே உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்..!

ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கே.பாலகிருஷ்ணன்  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்தார். சமீபத்தில் மதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மூத்த தலைவர் என்.நன்மாறன் அவர்களின் மறைவின் போதும் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். 

இதையும் படிங்க;- திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை.. சிறுவன் உள்பட 3 பேர் கைது..!

முக்கியமாக குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த காலக்கட்டத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டாலே பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தனியார் மருத்துவமனையை நாடிப்போகும் நிலையில், கம்யூனிஸ்ட் தோழர்கள் மற்றும் அதன் தலைவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அனைவருக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர்.

click me!