வாக்கு எண்ணும் மையத்தில் போர்ஜரி.. துரைமுருகன் வெற்றிக்கு ஆப்பு வைக்க அதிமுக எடுத்த அதிரடி முடிவு..!

By vinoth kumarFirst Published Jun 16, 2021, 12:46 PM IST
Highlights

ஈவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளதாகவும், தபால் மற்றும் மின்னணு வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு பெற்றி பெற்ற அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

2021 சட்டமன்ற தேர்தலில் 10வது முறையாக காட்பாடியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் வி. ராமு, அமமுக சார்பில் ஏ.எஸ்.ராஜா, ஐஜேகே வேட்பாளராக எம்.சுதர்சன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், துரைமுருகனுக்கும் , அதிமுக வேட்பாளர் வி. ராமுவுக்கும் கடும் போட்டி நிலவியது. ஆரம்பம் முதலே பின்னடைவை சந்தித்து வந்த துரைமுருகன், இறுதியில் 745 என்ற சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக சார்பில் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 745 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ராமு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் தாக்க செய்துள்ள மனுவில், ஈவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளதாகவும், தபால் மற்றும் மின்னணு வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது

click me!