காசி பயணம் முதல் தீண்டாமை எதிர்ப்பு வரை.. பகுத்தறிவு பகலவன் பெரியார் வாழ்க்கை வரலாறு குறிப்புகள்..!

By Raghupati RFirst Published Sep 16, 2022, 7:15 PM IST
Highlights

தந்தை பெரியார் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக  ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.

பெரியாரின் இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர் ஆகும். கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி என்ற இரண்டு சகோதரிகளும் இருந்தனர். இவருடைய குடும்பம் வசதியில் மிகப்பெரிய குடும்பம் ஆகும். தன்னுடைய படிப்பை பெரியார் ஐந்தாம் வகுப்போடு நிறுத்திக் கொண்டார். 19 வது வயதில் திருமணம் செய்துக்கொண்டார். 

இவருக்கு பெண்குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது. 1902 ஆம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களை நடத்தி வைக்க தொடங்கினார். அவர் தந்தைக்கும், அவருக்கும் சில விஷயங்களில்  மனக்கசப்பு ஏற்பட துறவு பூண்டு காசிக்கு சென்றார் தந்தை பெரியார். காசியில் அவருக்கு நடந்த நிகழ்வுகளால் இறைமறுப்பாளராக தன்னை மாற்றிக் கொண்டார்.

 

மேலும் செய்திகளுக்கு..”பெரியாரின் பிறந்தநாள்”.. திரும்பி பார்க்க வேண்டிய வரலாற்றில் பதிவான பொன்மொழிகள் இதோ !!

ஆரம்ப காலத்தில் காந்தி கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு 1919-ம் ஆண்டு தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தி தலைமையில் காங்கிரஸ் நடத்திய பல போரட்டங்களில் கலந்துக்கொண்டு சிறை சென்றார். 1922-ம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தந்தை பெரியார் தேர்தெடுக்கப்பட்டார். பிறகு 1925-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினார். 

கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் கோயிலுக்குள் நுழையவும், கோயில் வீதியில் நடக்கவும் தலித் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையை எதிர்த்து நடந்த போரட்டத்தில் தந்தை பெரியார் கலந்து கொண்டு சிறை சென்றார். இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் ‘வைக்கம் வீரர்’ என்று அழைக்கப்பட்டார்.

1925-ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். தன்னுடைய குடி அரசு நாளிதழையும் தொடங்கினார். 1939 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் சிறை வைக்கப்பட்டிருந்த இராமசாமி விடுதலையானதும், நீதிக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார். பின்னர் நீதிக்கட்சி என்ற பெயரை 1944-ம் ஆண்டு திராவிட கழகம் என பெயர் மாற்றினார் பெரியார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது. 

மேலும் படிக்க;- ”பெரியாரின் பிறந்தநாள்”.. திரும்பி பார்க்க வேண்டிய வரலாற்றில் பதிவான பொன்மொழிகள் இதோ !!

தான் மரணித்து மண்ணுக்குள் புதைக்கப்படும் வரை என் மக்களை சாஸ்திரங்களின் படி கீழ்ஜாதி மக்களாகவும் அரசியல்படி அடிமைகளாகவும் விட்டுச் செல்கிறேனே என்று புலம்பியவர் தந்தை பெரியார். திராவிடர் கழகம் தலித்துக்களுக்கு எதிராகப் பயன்படுத்தபடும் தீண்டாமையை மிகத்தீவிரமாக எதிர்ப்பதிலும், ஒழிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டது. 

இதையும் படிங்க;- எத்தனை பேர் வந்தாலும் இவர்தான் பெரியார்.. சமூக நீதி நாளின் நாயகன் “தந்தை பெரியார்”..!

பெண்கள் உரிமை, பெண் கல்வி, பெண்களின் விருப்பத்திருமணம், கைம்பெண் திருமணம், ஆதரவற்றோர் மற்றும் கருணை இல்லங்கள் போன்ற செயல்களில் ஈடுபட்டனர். 1952-ம் ஆண்டு பிள்ளையார் உருவ பொம்மைகளை உடைத்தது மட்டுமல்லாமல், இந்துக்களின் கடவுளாக கருதப்பட்ட ராமரின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தையும் நடத்தினார். 

தந்தை பெரியார், டிசம்பர் 24-ம் தேதி 1973-ம் ஆண்டு, தனது 94வது வயதில் காலமானார்.வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார் தந்தை பெரியார்.

இதையும் படிங்க;- திராவிடர் கழகமாக மாற்றப்பட்ட நீதிகட்சி… பெரியாரின் பங்கு என்ன? விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு!!

click me!