ஒன்றாக இணைந்து விட்டால் எங்களை செஞ்சிடுவாங்களா? - சீறிப்பாயும் வெற்றிவேல் எம்.எல்.ஏ...

Asianet News Tamil  
Published : Aug 18, 2017, 06:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
ஒன்றாக இணைந்து விட்டால் எங்களை செஞ்சிடுவாங்களா? - சீறிப்பாயும் வெற்றிவேல் எம்.எல்.ஏ...

சுருக்கம்

Perambur Block MLA Vijayawale said that if we join together we will be gonna be told that we have the strength of the volunteers.

ஒன்றாக இணைந்து விட்டால் எங்களை செஞ்சிடுவாங்களா என்றும் தொண்டர்களின் பலம் எங்களிடமே உள்ளது எனவும் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார். 

ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணிகள் இணைப்பு  குறித்து இரு தரப்பினரும் தற்போது பேசி வருகின்றனர். ஓபிஎஸ் அணியின் சார்பில்  வைக்கப்பட்ட  இரண்டு கோரிக்கைகளை  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது அணிகள்  இணைப்பு குறித்து தீவிரமாக   பேசி வருகின்றனர்.

அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்று ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

அதன்படி சென்னையில் இன்று ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன்  தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதனிடையே டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான வெற்றிவேல் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர், தங்களது ஆதரவு மாவட்ட நிர்வாகிகளுடன்  சென்னையில் ஆலோசனை நடத்தினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல், ஒன்றாக இணைந்து விட்டால் எங்களை செஞ்சிடுவாங்களா என்றும் தொண்டர்களின் பலம் எங்களிடமே உள்ளது எனவும் தெரிவித்தார். 

வட சென்னை வடக்க்கு மாவட்டத்தில் வரும் 23 ஆம் தேதி நடக்கவிருக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஆலோசனை நடத்தினோம் எனவும், உண்மையான அதிமுக நாங்கள் தான் என்பதில் மாற்று கருத்து இல்லை எனவும் தெரிவித்தார். 

மேலும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தான் எனவும், எங்களுடன் அவர்கள் இணக்கமாக இருந்தால் நாங்களும் இணக்கமாக இருப்போம் என குறிப்பிட்டார். 
 

PREV
click me!

Recommended Stories

5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!
‘4-ல் 1கூட இல்லை.. ஸ்டாலின் சொல்லும் அத்தனையும் பச்சைப் பொய்..! எடப்பாடி பழனிசாமி சீற்றம்..!