இவ்வளவு அனுபவித்தும் இன்னும்கூட திருந்தாத மக்கள்... மாநகர் பேருந்தில் பயணிப்போரின் கவனத்திற்கு..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 9, 2020, 11:25 AM IST
Highlights

மாநகர் போக்குவரத்து கழக பயணச்சீட்டு பரிசோதகர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுவரும் சிறப்பு பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு பரிசோதனையின்போது பயணச் சீட்டு இன்றி  பயணிப்போரிடம் அபராதத் தொகையாக அதிகபட்சமாக 500 வசூலிக்கப்பட்டு வருகிறது

.

மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணச் சீட்டு இன்றி பயணம் செய்த சுமார் 4,644 பயணிகளிடம் இருந்து ரூபாய்  5,52,050 ரூபாய் அபராதத் தொகை வசூல் செய்யப்பட்டதாக மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து பொதுப் போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டது. வைரஸ் தொற்று ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததையடுத்து. தமிழக மக்களின் பொருளாதார காரணங்களுக்காக தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் பேருந்துகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே ஐந்து மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணச்சீட்டின்றி பயணம் செய்த நபர்களிடமிருந்து அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகர போக்குவரத்துகழகம்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் உரிய பயணச்சீட்டு மற்றும் மாநகர் போக்குவரத்து கழகத்தால் வழங்கப்பட்டுள்ள பயன அட்டை இல்லாமல் பயணம் செய்வது மோட்டார் வாகன சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதனால் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை வலியுறுத்தி பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பயணிகள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட நாள்தோறும் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகர் போக்குவரத்து கழக பயணச்சீட்டு பரிசோதகர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுவரும் சிறப்பு பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு பரிசோதனையின்போது பயணச் சீட்டு இன்றி  பயணிப்போரிடம் அபராதத் தொகையாக அதிகபட்சமாக 500 வசூலிக்கப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்தோரிடம் கடந்த செப்டம்பர் 2020 மாதத்தில் சுமார் 1,522 நபர்களிடம் அபராத தொகையாக 1,97,550 ரூபாயும் மற்றும் அக்டோபர் 2020 மாதத்தில் 3,122 பேரிடம் அபராதத் தொகையாக 3,54,500. ஆக மொத்தம் 4,6 44 நபர்களிடம் இருந்து அபராதத் தொகையாக 5,52,050 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களிலும் இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 
 

click me!