7 பேர் விடுதலை குறித்து பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை..!! ஸ்டாலினை அடித்தும் நொறுக்கிய அமைச்சர்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 9, 2020, 10:54 AM IST
Highlights

இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது. விவசாய பொருட்கள் அதிக கொள்முதல் மற்றும் விற்பனை சட்டம், ஒழுங்கு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை முதல்வர் உருவாக்கியுள்ளார்.

7 பேர் விடுதலை குறித்து  பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை எனவும், தமிழக அரசு ஆளுநருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் அவர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறேன் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது; தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முதல்வரின் கடுமையான முயற்சியால் தமிழ் நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. 

இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது. விவசாய பொருட்கள் அதிக கொள்முதல் மற்றும் விற்பனை சட்டம், ஒழுங்கு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை முதல்வர் உருவாக்கியுள்ளார். அதேபோல் மழைநீர் கடலில் கலப்பதை தவிர்த்து மக்களுக்கு முழுமையாக பயன்படும் வகையில் சிறப்பான நீர் மேலாண்மை மேற்கொண்டதன் காரணமாக நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 

வரும் சட்டமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் அதிமுக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும், அதனால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமெரிக்கத் துணை அதிபராக தேர்வு  செய்யப்பட்டுள்ள கமல ஹாரிசுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்ற அவர், 7 தமிழர் விடுதலை குறித்து பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை என்றார். அதே நேரத்தில் தமிழக அரசு தொடர்ந்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் அவர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று தான் நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.

 

click me!